சாம்சங் முதல் ரெட்மீ வரை... 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம்
சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன. குறைந்த விலையில் நல்ல செயல்திறனை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் வலுவான பேட்டரிகள் கொண்ட சக்திவாய்ந்த செயலிகளைக் கொண்டுள்ளன.
ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், தினம் தினம் பல புதிய போன்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. இப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள் பல குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால் ஸ்மார்ட்போன் வாங்குவது அனைவருக்கும் எளிதாகிவிட்டது. அந்த வகையில், அமேசான் ஆன் லைன் ஷாப்பிங் தளத்தில் சுமார் ரூ.15,000 என்ற விலையில் கிடைக்கும் சில ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன. குறைந்த விலையில் நல்ல செயல்திறனை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் நீடித்து இருக்கும் ஆற்றல் கொண்ட பேட்டரிகள் மற்றும் திருதமாக இயங்கும் சக்தி வாய்ந்த செயலிகளைக் கொண்டுள்ளன. 15,000 ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் சிலவற்றை தற்போது அமேசானில் இருந்து மலிவாக வாங்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Samsung Galaxy M15 5G
ஆண்ட்ராய்டு 14 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் சாம்சங் கேலக்ஸி M15 5G ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 6000mAh திறன் கொண்ட சக்தி வாய்ந்த பேட்டரி, பல அம்ணிநேரம் நீடித்து இருக்கும். இதில் 50எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. MediaTek Dimensity 6100+ செயலி போனில் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் 50MP பிரதான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி M15 5G டாப் வேரியண்டின் விலை ரூ.14,4999. இந்த போனுக்கு அமேசான் 1000 ரூபாய் தள்ளுபடியும் வழங்குகிறது.
Realme NARZO 70 5G
ரியல்மீ நர்ஸோ 70 5G ஃபோனில் Dimensity 7050 5G செயலி பொருத்தப்பட்டுள்ளது. 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB வரை ரேம் உள்ளது. ஃபோனில் 45W SUPERVOOC சார்ஜிங் வேகத்துடன் 5000mAh பேட்டரி உள்ளது. தொலைபேசியில் 50MP பிரதான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் டாப் வேரியண்டின் விலை ரூ.13,999. BOBCARD பரிவர்த்தனைகளுக்கு அமேசான் ரூ.1500 வரை தள்ளுபடி வழங்குகிறது.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ... 2ஜிபி டேட்டா வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்
Realme 12 5G
ரியல்மீ 12 5G ஸ்மார்ட்போனில் புகைப்பட பிரியர்களுக்காக 108MP பிரதான கேமரா உள்ளது. தொலைபேசியில் 45W SUPERVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5000mah பேட்டரி வழங்கப்படுகிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உங்களுக்கு இசை மற்றும் ஆடியோவிலன் நல்ல அனுபவத்தைகொடுக்கும். போனின் டாப் வேரியண்டின் விலை ரூ.14,699. அமேசான் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ.1250 வரை தள்ளுபடி உள்ளது.
ரெட்மி 12 5ஜி
ரெட்மி 12 5ஜி தொலைபேசியில் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 50 எம்பி பிரதான கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் உடன் 256ஜிபி உள் சேமிப்பு உள்ளது. போனில் 5000mAh பேட்டரி உள்ளது. அமேசானில் போனின் விலை ரூ.13,998. இந்த ஸ்மார்ட்போனிற்கு அமேசானில் 1000 ரூபாய் கூப்பன் தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் படிக்க | Itel A50... 5000mAh பேட்டரி திறனுடன் 6000 ரூபாயில் அசத்தலான போன்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ