அமேசான் ஸ்மார்ட்போன் அப்கிரேஃட் டேஸ் ஆஃபர்: பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் அமேசான் ஸ்மார்ட்போன் அப்கிரேஃட் டேஸ் ஆஃபர் (Amazon Smartphone Upgrade Days Offers) ஏப்ரல் 15 முதல் தொடங்கியுள்ளது. இதில் பல பிரபல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை மிக மலிவாகப் பெறுவீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த அமேசானின் விற்பனையின் சில சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த சேலின் மூலம் இந்த அற்புதமான 5ஜி ஸ்மார்ட்போன்களை 6 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.


ரெட்மி நோட் 11டி 5கி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்பு கொண்ட ரெட்மி-யின் இந்த 5ஜி போன் ரூ.20,999க்கு பதிலாக ரூ.16,999க்கு விற்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் ரூ.12,100 சேமித்து இந்த போனை வெறும் ரூ.4,899க்கு வாங்கலாம்.


லாவா ஃபயர் 5 ஜி
குவாட் கேமரா அமைப்பு மற்றும் வலுவான பேட்டரி கொண்ட இந்த 5ஜி போன் ரூ.17,990க்கு விற்கப்படுகிறது. அதன் அசல் விலை ரூ.23,999 ஆகும். இந்த ஒப்பந்தத்தில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கு ரூ.12,100 தள்ளுபடி கிடைக்கும். பின்னர் இந்த போனை ரூ.5,890க்கு வாங்கலாம்.


மேலும் படிக்க | Tips and Tricks: மின்சார வாகனத்தின் பேட்டரியை பராமரிக்க டிப்ஸ் 


சாம்சங் கேலக்சி எம்32 5ஜி
இந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த சேலில் இது ரூ.23,999க்கு பதிலாக ரூ.16,999க்கு விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனுக்கு ஈடாக இதை வாங்கினால், ரூ.12,100 வரை சேமிக்கலாம். இந்த போனை ரூ.4,899க்கு வாங்கலாம்.


ரியல்மி நார்ஸோ 20 5ஜி 
ரியல்மி நார்ஸோ 20 5ஜி ஆனது பல மணிநேரம் நீடிக்கும் பேட்டரி பொருத்தப்பட்ட போனாகும். இது ரூ.17,999க்கு பதிலாக ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாயிரம் கூப்பன் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் ரூ.12,100 சேமித்த பிறகு, ரூ.2,899க்கு இந்த போனை வாங்க முடியும். 


iQOO Z6 5G
சிறந்த டிஸ்ப்ளே மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு கொண்ட இந்த 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.20,990க்கு பதிலாக ரூ.16,999க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரிலிருந்து ரூ.12,100 முழுமையான தள்ளுபடியைப் பெற்ற பிறகு, உங்களுக்கு இந்த போன் வெறும் ரூ.4,899-க்கு கிடைக்கும். 


மேலும் படிக்க | Redmi 10A Launch: ரூ.10,000-க்கும் குறைவான விலை, அசத்தும் அம்சங்கள், அறிமுக தேதி இதோ 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR