மிக குறைந்த விலையில் பல அசத்தலான பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்த வருகிறது சியோமி நிறுவனம். இந்நிறுவனம், தற்போது ஒரு பிதிய மாடலான ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ 5G வகை போன்களை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த வகை போன்கள் வரும் மார்ச் 9ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ரெட்மி தனது சமூக வலைத்தளங்களில் இந்த ஸ்மார்ட் போன் தொடர்பான விவரங்களையும், சிறப்பு அம்சங்களையும் வெளியிட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட நிலையில் இதன் விலை என்னவாக இருக்கும் என்ற பல்வேறு கேள்விகளுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | பாதி விலையை விட குறைவாக கிடைக்கிறது iPhone 11: அமேசானில் அதிரடி விற்பனை
அதாவது, வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் 120Hz அப்டேட்டுடன் கூடிய அமலேட் டிஸ்ப்ளே, 67W சார்ஜர் மற்றும் 108MP கேமரா போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், ரெட்மி நோட் 11 ப்ரோ 5G ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 மூலமாகவும். Redmi Note 11 Pro ஆனது ஆக்டா-கோர் ஏஆர்எம் மாலி மீடியா டேக் ஹீலியோ G96 மூலமாகவும் இயக்கப்படுகிறது. மேலும் 6GB ரேம் 64GB சேமிப்பு, 6GB ரேம் 128GB சேமிப்பு, 8GB ரேம் 128GB சேமிப்பு என மூன்று வேறுபாடுகளாக தயாரிக்கப்பட்டு இருப்பது மட்டும் இல்லாமல் போலார் வைட் (Polar White) , கிராபிடே க்ரெய் (Graphite Gray) மற்றும் அட்லாண்டிக் ப்ளூ (Atlantic Blue) என மூன்று வண்ணங்களிலும் வருகிறது.
ரெட்மி 10 ப்ரோ சீறியெசில் இருந்து வெளிவரும் அனைத்து போன்களுக்கும் விலையை உயர்த்தி விற்று கொண்டு இருக்கும் சியோமி நிறுவனம், தற்போது வெளிவர இருக்கும் ஸ்மார்ட் போன்களை எந்த ஒரு விலை உயர்த்தமும் இல்லாமல் முந்தைய சீரிஸ் போன்களின் விலைக்கே விற்கப்போவதாக passionategeekz யின் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Redmi Note 11 Pro, 6GB ரேம் 128GB சேமிப்பு ரூபாய் 16,999க்கும், 8GB ரேம் 128GB சேமிப்பு ரூபாய் 18,999க்கும் என Redmi Note 10 Pro வின் விளைக்கே விற்கப்படும் எனவும் Redmi Note 11 Pro 5G, 6GB ரேம் 128GB சேமிப்பு ரூபாய் 21,999க்கும், 8GB ரேம் 128GB சேமிப்பு ரூபாய் 23,999க்கும் விற்கப்படும் என ரெட்மி ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | 150W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் புதிய OnePlus!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR