Flipkart Big Saving Days Sale: பிளிப்கார்டில் பிக் சேவிங் டேஸ் சேல் (Flipkart Big Saving Days Sale) லைவாக உள்ளது. நாளை இந்த விற்பனையின் கடைசி நாளாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃப்ளிப்கார்ட் (Flipkart) விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். எனினும், சில பொருட்கள் விற்பனையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. 


ஐபோன் 13 தொடர் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது விற்பனையில் பட்டியலிடப்படவில்லை. இருப்பினும், இப்போதும் ஐபோன் 13 வாங்கினால் தள்ளுபடி பெற வாய்ப்பு உள்லது. ஐபோன் 13 128ஜிபி மாறுபாட்டில் வங்கி மற்றும் பரிமாற்றச் சலுகை உள்ளது. இது போனின் விலையை கணிசமாகக் குறைக்கிறது. இதன் மூலம் ரூ.79,900 மதிப்பிலான போனை வெறும் ரூ.57,455-க்கு வாங்கலாம்.


iPhone 13: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் ஆப்பிள் (Apple), ஐபோன் 13 சீரிஸை அறிமுகப்படுத்தியது. இது அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, வாடிக்கையாளர்கள் இதை மிகவும் விரும்பி வாங்கத் தொடங்கினர். இந்த ஆண்டின் இறுதியில், ஐபோன் 13 விற்பனையில் சாதனை படைத்தது. பிளிப்கார்டில் iPhone 13 128GB மாறுபாட்டின் விலை ரூ.79,900 தான். ஆனால், வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் இத விலையை கணிசமாகக் குறைக்கலாம்.


ALSO READ | Amazon Great Republic Day saleல் அசத்தலான தள்ளுபடியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்!


iPhone 13: வங்கி சலுகைகள்


Apple iPhone 13 ஐ வாங்குவதற்கு Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனில் ரூ.3,995 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை ரூ.75,995 ஆக இருக்கும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் இந்த சலுகையில் கிடைக்கிறது.


iPhone 13: எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்


iPhone 13 இல் ரூ.18,450 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள போனின் நிலை நன்றாகவும், போன் லேட்டஸ்ட் மாடல் போனாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். 


இந்த அனைத்து சலுகைகளும் உங்களுக்கு கிடைத்தால், இந்த போனை, மிகவும் குறைவாக வெறும் ரூ.57,455-க்கு வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும். 


ALSO READ | Flipkart Big Saving Days: அதிரடி தள்ளுபடியில் பொருட்களை அள்ள அரிய வாய்ப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR