Flipkart Big Saving Days: அதிரடி தள்ளுபடியில் பொருட்களை அள்ள அரிய வாய்ப்பு

இந்த மாதம் 17 ஆம் தொடங்கி ஆறு நாட்களுக்கு சிறப்பு குடியரசு தின விற்பனையாக நடைபெற்று வரும் இந்த விற்பனையில் பொருட்களில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 20, 2022, 01:04 PM IST
  • வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிளிப்கார்டின் Flipkart 'Big Saving Days' 2022 லைவ் ஆக உள்ளது.
  • பட்டர்ஃப்ளை, பிரெஸ்டீஜ், பஜாஜ் போன்ற சமையலறை சாதனங்கள் ரூ.299 முதல் தொடங்குகின்றன.
  • குளிர்சாதனப் பெட்டிகளைப் பொறுத்தவரை, எல்ஜி, சாம்சங், வேர்ல்பூல் மற்றும் பல பிராண்டுகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம்.
Flipkart Big Saving Days: அதிரடி தள்ளுபடியில் பொருட்களை அள்ள அரிய வாய்ப்பு title=

Flipkart Electronics Sale 2022: வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிளிப்கார்டின் Flipkart 'Big Saving Days' 2022 லைவ் ஆக உள்ளது. இந்த விற்பனைக்கான கடைசி தேதி ஜனவரி 22, 2022 ஆகும். 

இந்த மாதம் 17 ஆம் தொடங்கி ஆறு நாட்களுக்கு சிறப்பு குடியரசு தின விற்பனையாக நடைபெற்று வரும் இந்த விற்பனையில், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பாகங்கள், மொபைல் ஃபோன்கள், மடிக்கணினிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் மற்றும் பிற வகைப் பொருட்களில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. .

flipkart.com அல்லது Flipkart செயலியில் லாக் இன் செய்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை மிகக் குறைந்த விலையில் அள்ளிச்செல்லலாம். 

மின்னணு சாதங்கள், டி.வி, மற்றும் பிற பொருட்களில் கிடைக்கும் சில அசத்தல் சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

எலக்ட்ரானிக் & டிவி மற்றும் பிற பொருட்களில் கிடைக்கும் சில அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

1) Flipkart 'Big Saving Days' ஆனது Lenovo, Asus, Realme, Dizo, OnePlus, Samsung, Mi, Boat, Apple மற்றும் பல சிறந்த பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாகங்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

2) டிவி மற்றும் சாதனங்களில், பிளிப்கார்ட் (Flipkart), 75% வரை தள்ளுபடி வழங்குகிறது. தொலைக்காட்சிகளை வாங்கத் திட்டமிடுபவர்கள் Mi, Samsung, OnePlus மற்றும் பல சிறந்த பிராண்டுகளில் 70 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். 

3) பட்டர்ஃப்ளை, பிரெஸ்டீஜ், பஜாஜ் போன்ற சமையலறை சாதனங்கள் ரூ.299 முதல் தொடங்குகின்றன.

4) முழு தானியங்கி சலவை இயந்திரங்கள் (Washing Machine) (எல்ஜி, சாம்சங் மற்றும் பல) ரூ.10,490 இலிருந்து கிடைக்கின்றன.

5) குளிர்சாதனப் பெட்டிகளைப் பொறுத்தவரை, எல்ஜி, சாம்சங், வேர்ல்பூல் மற்றும் பல பிராண்டுகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம்.

6) குறைந்த விலை ஏசிகளுக்காக நீண்ட நாட்களாக காத்திருப்பவர்கள் Samsung, Voltas, LG, Lloyd மற்றும் பல வகை பிராண்டுகளில் 55% வரை தள்ளுபடியைப் பெறலாம்.

7) Kent, Philips, Bajaj, Nova, Hindware, Eureka Forbes, Livpure மற்றும் பல பிராண்டுகளில் ப்யூரிஃபையர்கள், அயர்ன் பெட்டிகள், இன்வெர்ட்டர்கள் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களில் ரூ. 10,000 வரை தள்ளுபடி பெறலாம்.

8) Flipkart ஸ்மார்ட்வாட்ச்களில் (Smartwatch) 80 சதவீதம் வரை தள்ளுபடியையும், அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. கேபிள்கள், சார்ஜர்கள் போன்ற நவநாகரீக மொபைல் பாகங்கள் வெறும் ரூ.49 முதல் கிடைக்கின்றன. 

ALSO READ | Vivo வாங்க சரியான நேரம்..! கலர்மாறும் மொபைலுக்கு ரூ.2,500 ஆஃபர்..! மிஸ் பண்ணீடாதீங்க..

உடனடி தள்ளுபடி சலுகைகள்

'Big Saving Days' விற்பனையில், ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் ஷாப்பிங்க் செய்தால், கூடுதல் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக சேமிக்க முடியும். 

அனைத்து வகைகளிலும் டெபிட் கார்டு மூலம் குறைந்தபட்ச பரிவர்த்தனை மதிப்பு ரூ 2500 ஆகும், மளிகை பொருட்களின் மதிப்பு ரூ 2000 ஆகும். அதேசமயம் கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச பரிவர்த்தனை மதிப்பு அனைத்து வகைகளிலும் ரூ 5000 மற்றும் மளிகை சாமான்களில் ரூ 2000 ஆகும்.

குறிப்பு:  ரூ. 30,000 மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்ட் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.250 தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும், இது பெரிய உபகரணங்கள் மற்றும் மின்னணு வகைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ALSO READ | வெறும் ரூ.800க்கு Motorola போனை Flipkart இல் வாங்க அரிய வாய்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News