அமேசான் விற்பனை ஸ்மார்ட்போன் சலுகைகள்: இந்த நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் பிரபலமாகியுள்ளது. இதன் மூலம் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை எளிதாக வாங்க முடிகிறது. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் பற்றி பேசுகையில், அமேசானின் பெயர் தான் முதலில் உள்ளது. பல ஆன்லைன் ஷாப்பிங் பயனர்களின் பிடித்தமான விற்பனை தளமாக அமேசான் உள்ளது. அமேசானில் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசான் ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் சேல் ( Amazon Smartphone Upgrade Days Sale) என்ற இந்த விற்பனையில், Apple, Samsung, Redmi மற்றும் Xiaomi போன்ற சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த போன்களை பயனர்கள் சிறந்த தள்ளுபடியில் வாங்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த விற்பனையில் கிடைக்கும் சிறப்பு சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


அமேசான் ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேய்ஸ் சேல்  


அமேசானில், புதிய ஸ்மார்ட்போன் விற்பனையான அமேசான் ஸ்மார்ட்போன் அப்கிரேட் சேல்ஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இது இன்று, அதாவது அக்டோபர் 28, 2022 அன்று முடிவடையும். இந்த விற்பனையில், சிறப்பு வங்கி சலுகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலன்கள் அனைத்து டீல்களிலும் வழங்கப்படுகின்றன. அக்டோபர் 28, 2022 வரை பயனர்கள், AU வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் RBL வங்கி கிரெடிட் கார்டுகளில் 10% தள்ளுபடியைப் பெறலாம். 


மேலும் படிக்க | ரெட்மி நோட் 12 சீரிஸ் ரிலீஸ் எப்போது?... வெளியான அப்டேட்


ஐபோன் 13 முதல் சாம்சங் போன்கள் வரை: அனைத்திலும் பெரும் தள்ளுபடிகள்


இந்த சேலில், iQOO Z6 5G ஸ்மார்ட்போனை 14,999 ரூபாய்க்கு வாங்கலாம். iQOO Z6 Lite 5Gயின் விலை 13,249 ரூபாயாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிச் சலுகைகள் மூலம் ரூ.1000 மற்றும் ரூ.750 தள்ளுபடியைப் பெறலாம். 


உங்கள் பட்ஜெட் 30 ஆயிரம் ரூபாய் என்றால், நீங்கள் OnePlus Nord CE 2 மற்றும் OnePlus 10R ஆகியவற்றையும் வாங்கலாம். OnePlus Nord CE 2 ஐ 23,499 ரூபாய்க்கும், OnePlus 10R ஐ 29,499 ரூபாய்க்கும் பயனர்கள் வாங்கலாம்.


Redmi Note 11T 5G, Redmi 10A, Redmi note 11 Pro + 5G, Redmi K50i மற்றும் Samsung M13 5G போன்ற அனைத்து ஃபோன்களையும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடியில் வாங்கி மகிழலாம். ஐபோன் 13 ஸ்மார்ட்போனிலும் பெரிய தள்ளுபடி கிடைக்கிறது.


மேலும் படிக்க | கூகுளில் தேடக்கூடாத ‘சில’ விஷயங்கள்... மாட்டினால் கம்பி எண்ண வேண்டியது தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ