Redmi A1+: விலை வெறும் ரூ.7000, அம்சங்கள் அட்டகாசம், புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Redmi A1+ launched in India:போனின் விலை 7 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தாலும் அதன் அம்சங்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 14, 2022, 03:21 PM IST
  • Redmi A1+ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இதன் விற்பனை இந்தியாவில் அக்டோபர் 17 முதல் தொடங்கும்.
  • இந்தியாவில் ரெட்மி ஏ1+ விலை என்ன?
Redmi A1+: விலை வெறும் ரூ.7000, அம்சங்கள் அட்டகாசம், புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் title=

Redmi A1+ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது: Xiaomi இந்தியாவில் புதிய பட்ஜெட் தர ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது. இப்போது, ​​Redmi A1+ சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போனின் விலை 7 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தாலும் அதன் அம்சங்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. ரெட்மி ஏ1+ விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

ரெட்மி ஏ1+ விவரக்குறிப்புகள்

சீன தொழில்நுட்ப நிறுவனமான ரெட்மியின் புதிய மலிவு விலைக் கைப்பேசியானது முன்பக்கத்தில் 6.52-இன்ச் டிஸ்ப்ளே, எல்சிடி பேனல், 20:9 ஆஸ்பெக்ட் விகிதம், வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் ஸ்டாண்டர்ட் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் HD+ தெளிவுத்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புறம் மேல் இடது மூலையில் அமைந்துள்ள கேமரா தொகுதியில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் எல்இடி ஃபிளாஷ் மற்றும் பின்புற பேனலின் மையத்திற்கு அருகில் பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பின்புற பேனலில், பிரீமியம் உணர்வைச் சேர்க்க லெதர் டெக்ஸ்சர் ஃபினிஷும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Amazon Offer: ரூ.79 ஆயிரம் ஸ்மார்ட்போன் ஆஃபரில் 14,000-க்கு விற்பனை 

ரெட்மி ஏ1+ கேமரா

கேமரா அமைப்பில் 8 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் டெப்த் ஷூட்டர் உள்ளன. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. ஹூட்டின் கீழ், சாதனம் மீடியாடெக் ஹீலியோ A22 SoC உடன் 3GB வரையிலான ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது microSD கார்டு ஸ்லாட் வழியாக மேலும் விரிவாக்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன், 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் ரெட்மி ஏ1+ விலை

ரெட்மி ஏ1+ ஆனது Android 12 OS (Go Edition) இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விற்பனை இந்தியாவில் அக்டோபர் 17 முதல் தொடங்கும். இதன் விற்பனை இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இதன் 2ஜிபி + 32ஜிபி மாறுபாடு ரூ.6,999க்கும், 3ஜிபி + 32ஜிபி மாடல் ரூ.7,999க்கும் விற்பனைக்கு வரும். சாதனம் Mi.com இணையதளம், Mi Home கடைகள் மற்றும் அமேசான் மற்றும் பிற சில்லறை பங்குதாரர்களிடமும் கிடைக்கும். 

மேலும் படிக்க | Amazon Offer: டேட்டா வேகம் ஜெட் வேகத்தில் இருக்கும் 5G ஸ்மார்ட்போன்; அமேசானில் வெறும் ரூ.649 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News