Flipkart அதிரடி தீபாவளி சேலில் சரவெடி சலுகைகள்: 80% வரை தள்ளுபடி
பண்டிகைக் காலம் வந்துவிட்டது. ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு Flipkart Big Diwali Sale 2021 கொண்டாட்டத்திற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.
Flipkart Big Diwali Sale 2021 Offers: பண்டிகைக் காலம் வந்துவிட்டது. ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு Flipkart Big Diwali Sale 2021 கொண்டாட்டத்திற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. Flipkart Big Diwali Sale 2021 நாளை அக்டோபர் 28, 2021 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது நவம்பர் 3, 2021 வரை தொடரும். Flipkart Big Diwali Sale 2021 இல் கிடைக்கும் பல்வேறு சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Flipkart Big Diwali Sale 2021 இந்த உறுப்பினர்களுக்கு சற்று முன்னதாகவே தொடங்கியது
Flipkart Big Diwali Sale 2021 இந்த மாதம் 28 முதல் தொடங்கியது. இருப்பினும், பிளஸ் உறுப்பினர்களுக்கான விற்பனை அக்டோபர் 27, 2021 முதலே தொடங்கியது. உறுப்பினர்கள் மொபைல்கள் (Mobile Phones), மடிக்கணினிகள், டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்காரம், தளபாடங்கள், அழகு சாதனங்கள், புத்தகங்கள் போன்ற பல பொருட்களில் பல்வேறு சலுகைகளையும் நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.
மொபைல் மற்றும் டேப்லெட்டுகளுக்கு 80% வரை தள்ளுபடி
இந்த பண்டிகைக் காலத்தில் புதிய மொபைல்கள் மற்றும் டேப்லெட்களை வாங்க நினைப்பவர்கள், பிளிப்கார்ட் (Flipkart) சேலில், Samsung, Xiaomi, Apple, Moto மற்றும் பல பிராண்டுகளின் மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எலக்ட்ரானிக் பொருட்களில் 80% வரை தள்ளுபடி
Flipkart Big Diwali Sale 2021 எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. டெஸ்க்டாப்களில் 30 சதவீதம் வரை தள்ளுபடியும், டெஸ்க்டாப் பிசிக்களில் 30 சதவீதம் வரை தள்ளுபடியும், அதிகம் விற்பனையாகும் பவர் பேங்குகளில் 75 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 70 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது.
ALSO READ: iPhone 12-ல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி: பிளிப்கார்ட் விற்பனையில் ஜாக்பாட்!
TV-கள் மற்றும் உபகரணங்களுக்கு 75% வரை தள்ளுபடி
டி.வி மற்றும் பிற சாதனங்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஃபேஷன் பிராண்டுகளுக்கு 60-80% தள்ளுபடி
பல்வேறு பிராண்டுகளில் உள்ள ஆடைகளுக்கு 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இது தீபாவளி நேரம் என்பதால், வாடிக்கையாளர்கள் புதிய ஆடைகளை வாங்க இந்த சலுகைகளை வெகுவாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த பொருட்களை ரூ.99-க்கு வாங்கலாம்
Flipkart Big Diwali Sale 2021-இல் வாடிக்கையாளர்கள் பல்வேறு அழகு சாதனங்கள், பொம்மைகள் மற்றும் உணவுப் பொருட்களை ரூ.99-க்கு வாங்கலாம். குறிப்பிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சமையலறை பாத்திரங்களும் ரூ.99-க்கு கிடைக்கும்.
10% உடனடி தள்ளுபடி
எஸ்பிஐ (SBI) டெபிட் கார்டுகள், எஸ்பிஐ கார்டுகள் மற்றும் எஸ்பிஐ யோனோ ஆகியவற்றில் 10 சதவீத உடனடி தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும் என்பதும் இந்த பிளிப்கார்ட் சேலில் உள்ள மற்றொரு சிறப்பம்சமாகும்.
ALSO READ:பிளிப்கார்ட் சேலில் படு டிமாண்டில் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR