நம்ப முடியாத விலையில் iPhone 12: Flipkart அதிரடி பண்டிகை கால சலுகை

இந்தியாவில் பண்டிகை காலம் துவங்கிவிட்டது. இந்த நேரத்தில் பொதுவாக மக்கள் வீட்டு உபயோக பொருட்களையும், தங்களுக்கு பிடித்தமான தயாரிப்புகளையும் வாங்குவது வழக்கம். நீங்களும் ஷாப்பிங் செய்ய தயாராக இருந்தால், உங்களுக்காக பல சலுகைகளும் தள்ளுபடிகளும் காத்திருக்கின்றன.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 23, 2021, 01:28 PM IST
நம்ப முடியாத விலையில் iPhone 12: Flipkart அதிரடி பண்டிகை கால சலுகை

iphone offers India: இந்தியாவில் பண்டிகை காலம் துவங்கிவிட்டது. இந்த நேரத்தில் பொதுவாக மக்கள் வீட்டு உபயோக பொருட்களையும், தங்களுக்கு பிடித்தமான தயாரிப்புகளையும் வாங்குவது வழக்கம். நீங்களும் ஷாப்பிங் செய்ய தயாராக இருந்தால், உங்களுக்காக பல சலுகைகளும் தள்ளுபடிகளும் காத்திருக்கின்றன.

ஐபோனின் (iPhone) Flipkart big billion days 2021-ல் அதிரடி தள்ளுபடியில் iPhone 12 வாங்க சூப்பர் வாய்ப்பு) வெவ்வேறு மாடல்களில் தற்போது பெரும் தள்ளுபடிகளும் சலுகைகளும் கிடைக்கின்றன. நீங்கள் நோ காஸ்ட் EMI-யிலும் ஷாப்பிங் செய்யலாம், எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். வங்கிகளின் கார்டுகளில் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். 

இந்த ஐபோன்கள் ரூ 15,000 தள்ளுபடியில் கிடைக்கின்றன

நீங்கள் விரும்பினால், உங்களுக்கு விருப்பமான ஐபோனை Flipkart இல் ரூ .15,000 வரையிலான தள்ளுபடியில் வாங்கலாம். நீங்கள் APPLE iPhone 12 Mini-ஐ (கருப்பு, 64 ஜிபி) வெறும் 42,099 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ .59,900 ஆகும். APPLE iPhone 12-ஐ (ஊதா, 128 ஜிபி) 60,199 ரூபாய்க்கு வாங்கலாம். APPLE iPhone 12 (வெள்ளை, 64 ஜிபி) விலை ரூ .53,999 ஆகும். iPhone SE-யின் (கருப்பு, 64 GB) விலை 30,099 ரூபாய் ஆகும். APPLE iPhone SE-யின் (சிவப்பு, 256 ஜிபி) விலை 44,999 ஆகும். இதன் அசல் விலை ரூ.54,900 ஆக உள்ளது.

ALSO READ: Buy Now Pay Later: பண்டிகை கால ஷாப்பிங்கில் இனி டென்ஷன் வேண்டாம் 

ஐபோன் 11-லும் சிறந்த சலுகைகள்

ஆப்பிளின் ஐபோன் 11 (மஞ்சள், 64 ஜிபி) விலை ரூ .49,900. இந்த முறை எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கிறது. குரோமாவில் ஆப்பிள் ஐபோன் 11 (64ஜிபி ரோம், 4ஜிபி ரேம், எம்எச்டிஎஃப்3எச்என்/ஏ, ஊதா) விலை ரூ.47,400. அதன் அசல் விலை ரூ.49,900 ஆகும். நீங்கள் APPLE iPhone SE-ஐ (வெள்ளை, 128 ஜிபி) ஃபிளிப்கார்டில் (Flipkart) ரூ .34,999 க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ .44,900 ஆகும்.

மேக்புக்கிலும் அற்புதமான சலுகைகள்

நீங்கள் ஒரு மேக்புக்-ஐ வாங்க விரும்பினால், அதற்கும் ஒரு சிறந்த சலுகை உள்ளது. APPLE மேக்புக் ஏர் M1 - (8 GB/256 GB SSD/Mac OS Big Sur) MGN63HN/A -ஐ (13.3 அங்குலம், ஸ்பேஸ் கிரே, 1.29 கிலோ) ஃப்ளிப்கார்டில் ரூ .83,990 க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ.92,900 ஆகும். நீங்கள் அதை எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால், 10 சதவீத தள்ளுபடியும் பெறலாம். இதில் பல பெரிய சலுகைகளும் கிடைக்கின்றன.

ALSO READ: Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.4,999-க்கு கிடைக்கிறது சாம்சங் Smart TV 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News