Flipkart Year End Sale 2022: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022 நடந்துவருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. பிளிப்கார்ட்டின் இந்த விற்பனை டிசம்பர் 24 ஆம் தேதி தொடங்கியது. இது டிசம்பர் 31 வரை இயங்கும். இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களும் இங்கு மிக மலிவான விலையில் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Nothing Phone (1) மிகவும் பிரபலமான போன் ஆகும். இந்த பிளிப்கார்ட் விற்பனையில் சுமார் 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த போனை 8 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்கலாம். இவ்வளவு பெரிய தள்ளுபடியை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


Flipkart Year End Sale 2022: Nothing Phone (1) ஃபோன் சலுகைகள் & தள்ளுபடிகள்:


Nothing Phone (1) (128ஜிபி) போனின் அறிமுக விலை ரூ.37,999 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இந்த போன ரூ.27,999க்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த போனுக்கு 10 ஆயிரம் ரூபாய், அதாவது 26 சதவிகிதம் தள்ளுபடி பெறப்படுகிறது. இதைத் தவிர இந்த போனில் வங்கி சலுகை மற்றும் பரிமாற்ற சலுகை அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதன் காரணமாக தொலைபேசியின் விலை இன்னும் கணிசமாகக் குறையும். 


மேலும் படிக்க | ரூ.21,000 Realme போனின் விலை வெறும் ரூ. 3,749: பிளிப்கார்ட்டில் தூள் கிளப்பும் தள்ளுபடி சலுகை 


Flipkart Year End Sale 2022: Nothing Phone (1) வங்கிச் சலுகை


Nothing Phone (1)ஐ வாங்க, ஃபெடெரல் பேங்க் அல்லது பேங்க் ஆஃப் பரோடா கார்டைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு 2,800 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடிக்கு பிறகு இந்த போனின் விலை ரூ.25,199 ஆக குறையும். இதைத் தவிர இந்த போனுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. 


Flipkart Year End Sale 2022: Nothing Phone (1) எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்


Nothing Phone (1) போனில் 17,500 ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும். எனினும், இந்த தள்ளுபடியை பெற வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போன் நல்ல நிலையிலும் லேட்டஸ்ட் மாடலாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் ரூ.17,500 முழுத் தள்ளுபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இந்த அனைத்து தள்ளுபடி சலுகைகளையும் பெற முடிந்தால், இந்த அட்டகாசமான போனின் விலை வெறும் ரூ.7,699 ஆக குறையும். 


மேலும் படிக்க | BSNL ரூ.107 ரீசார்ஜ் பிளான், 40 நாட்கள் வேலிடிட்டி, டேட்டா மற்றும் காலிங் நன்மை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ