Xiaomi நிறுவனம் Redmi K60 தொடர் வெளியீட்டு நிகழ்வை டிசம்பர் 27 ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்த நிகழ்வில், Redmi K60, K60 Pro மற்றும் K60e ஆகிய மூன்று பிரீமியம் போன்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. கூடுதலாக, புதிய wearables-ஐ அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. Redmi Watch 3, Redmi Band 2 மற்றும் Redmi Buds 4 Lite ஆகிய 3 ஸ்மார்ட் வாட்சுகள் தான் அப்போது வெளியிடப்படுகிறது.
Redmi மேலும் வரவிருக்கும் அணியக்கூடிய வடிவமைப்பு மற்றும் வேறு சில விவரங்களையும் கிண்டல் செய்துள்ளது. வாட்ச் 3 ஒரு தட்டையான சதுர வடிவ டயலைக் கொண்டிருக்கும். வரவிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்சில் வலது விளிம்பில் ஒரு பட்டன் உள்ளது. இது வாட்ச் மெனு ஷார்ட்கட்களைத் திறக்கப் பயன்படும்.
மேலும் படிக்க | நெட்பிளிக்ஸில் இனி பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவ்வளவுதான்...
ரெட்மி வாட்ச் 3-ன் விவரக்குறிப்புகள்
ரெட்மி வாட்ச் 3 - பொறுத்தவரை 600 nits உச்ச பிரகாசத்துடன் 1.75-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ச் 2-ஐ விட திரை 14.8% பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே 341PPI பிக்சல் அடர்த்தியையும் கொண்டுள்ளது. ரெட்மி பேண்ட் 2-க்கு செல்லும்போது, ஸ்மார்ட் பேண்ட் 1.47 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.
முன்பிருந்த மாடலைவிட திரையின் பரப்பளவு 76 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தடிமன் அடிப்படையில், இது 9.99 மிமீ இருக்கும். இந்த இரண்டு சாதனங்களும் பல உடற்பயிற்சி முறைகளுக்கான ஆதரவு, தூக்கத்தைக் கண்காணித்தல், இதயத் துடிப்பு கண்காணிப்பு போன்ற ஸ்மார்ட் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
இயர்பட்ஸ் வண்ண விருப்பங்கள்
Redmi K60 தொடர் வெளியீட்டு நிகழ்வில் வெளியிடப்படும் மூன்றாவது அணியக்கூடிய சாதனம் Redmi Buds 4 Lite ஆகும். இயர்பட்ஸ் நான்கு வண்ண விருப்பங்களில் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்ஸ் 4 லைட், பச்சை மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியிட முடிவு செய்துள்ளது. பச்சை நிற இயர்பட்கள் டூயல்-டோன் கேஸுடன் வரும், உட்புற பாகங்கள் இயர்பட்களின் நிறத்துடன் பொருந்தும். வெளிப்புற பகுதியின் நிறம் கருப்பு நிறமாக இருக்கும்.
அனைத்து இயர்பட்களின் எடையும் 3.9 கிராம் இருக்கும் என்று கூறப்படுகிறது. Active Noise Cancellation (ANC) போன்ற பிரீமியம் அம்சங்களுடன் பட்ஜெட் இயர்பட்கள் வரும். Redmi wearables பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். K60 Pro ரெட்மி மொபைலை பொறுத்தவரைக்கும், இது ஃபிளாக்ஷிப்பாக இருக்கும். ஃபோனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC, 2K டிஸ்ப்ளே மற்றும் 50MP பிரதான கேமரா சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு ஆகியவை இடம்பெறும்.
மேலும் படிக்க | iPhone 12 Mini மாபெரும் சலுகை: பிளிப்கார்ட்டில் அள்ளிச்செல்லும் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ