Flipkart Big Dussehra Sale 2022: நவராத்திரியில் ஷாப்பிங் செய்யும் எண்ணம் உள்ளவர்களுக்கு மிக மலிவாக ஷாப்பிங் செய்ய மிக நல்ல வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் வர்த்தக இணையதளமான பிளிப்கார்ட் பிக் நவராத்திரி விற்பனையை (Flipkart Big Dussehra Sale 2022) அறிவித்துள்ளது. இந்த விற்பனை சுமார் ஒரு வாரம் நீடிக்கும். இந்த நேரத்தில், ​​நீங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக் கேஜெட்களை மிக மலிவான விலையில் வாங்க முடியும். இந்த விற்பனையில் பல பொருட்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தசரா பிக் சேல் அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது


நிறுவனத்தின் அறிக்கையின்படி, பிளிப்கார்டின் பிக் தசரா விற்பனை (Flipkart Big Dussehra Sale 2022) அக்டோபர் 5 அன்று தொடங்கி அக்டோபர் 8 வரை இருக்கும். ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸை தவறவிட்டவர்களுக்கு, இந்த பிக் தசரா விற்பனையில் ஷாப்பிங் செய்வதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும். இந்த விற்பனையில், எச்டிஎஃப்சி வங்கி மூலம் பணம் செலுத்தும் பயனர்கள் பெரும் தள்ளுபடியைப் பெறுவார்கள். இதன் கீழ், பயனர்களுக்கு எளிதான EMI சலுகைகளும் வழங்கப்படும்.


மேலும் படிக்க | பிளிப்கார்டில் ஆர்டர் பண்ணா...ஸ்கூட்டர் வீட்டுக்கு வரும்: சிங்கிள் சார்ஜில் 146 கி.மீ ஜம்முனு போகலாம் 


Flipkart Plus உறுப்பினர்களுக்கு சிறப்பு தள்ளுபடி


இந்த Flipkart Big Dussehra Sale 2022 இல், வாடிக்கையாளர்களுக்கு பம்பர் தள்ளுபடிகள், வங்கி சலுகைகள் மற்றும் பல தயாரிப்புகளில் பரிமாற்ற சலுகைகள் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த விற்பனை அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. இருப்பினும், பிளிப்கார்டின் மெம்பர்ஷிப் இருப்பவர்கள், அதாவது Flipkart Plus உறுப்பினர்கள் இந்த விற்பனையை ஒரு நாள் முன்னதாக அதாவது அக்டோபர் 4 முதல் பயன்படுத்திக்கொள்ள முடியும். விற்பனையின் போது வழங்கப்படும் தள்ளுபடிகள் பற்றிய சில விவரங்களையும் நிறுவனம் பொதுவில் வெளியிட்டுள்ளது.


ஸ்மார்ட்போன் வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும்


பிளிப்கார்ட்டின் பை நவ் பே லேட்டர் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு விற்பனையில் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கான மொத்த தொகையில் ரூ.500 பரிசு வவுச்சர் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் விரும்பினால், இந்த சேலில் ரூ.199 என்ற ஆரம்ப விலையில் மொபைல் பாதுகாப்பு திட்டத்தையும் வாங்கலாம். பல்வேறு நிறுவனங்களின் அதிக மொபைல் போன்களை வாடிக்கையாளர்கள் வாங்கினாலும் பெரும் தள்ளுபடி வழங்கப்படும் என நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வாங்கினால் தள்ளுபடி கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் Oppo, Vivo, Apple, Realme, Poco, Samsung, Xiaomi போன்ற பிராண்டுகளின் மொபைல்களும் அடங்கும்.


எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கினால் 80% வரை தள்ளுபடி


இந்த மகா விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கினால் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு 75% வரை தள்ளுபடி வழங்கப்படும். இந்த தசரா பிக் சேலில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் பண்டில் பேமெண்ட் ஆகியவையும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக, நிறுவனம் ஓரிரு நாட்களில் விரிவான தகவல்களை அளிக்கக்கூடும். 


மேலும் படிக்க | விடிய விடிய பயன்படுத்தலாம்.. பேட்டரியே போகாது; குறைவான விலையில் பெஸ்ட் 12 ஜிபி RAM மொபைல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ