Renault Year End Offers: 2021 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. இந்த தருணத்தில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவும், சரக்கு இருப்பை விற்கவும் தங்கள் தரப்பில் பல வித தள்ளுபடிகளையும் சலுகைகளையும் கொடுப்பது வழக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், ரெனால்ட் இந்தியா (Renault India) தனது கார்களுக்கு 2021 டிசம்பரில் பம்பர் சலுகைகளை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைத்த தகவலின்படி, பிரெஞ்சு உற்பத்தியாளரான ரெனால்ட், சில வகை வாகனங்களுக்கு ரூ.1.30 லட்சம் தள்ளுபடியை வழங்குகிறது. இந்தச் சலுகைகளில் பணத் தள்ளுபடி, பரிவர்த்தனை பலன், லாயல்டி பெனிஃபிட் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். 


இந்த அனைத்து சலுகைகளும் நகரம், மாடல் மற்றும் டீலர்ஷிப் ஆகியவற்றைப் பொறுத்து மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் Renault இந்த சலுகைகளை 31 டிசம்பர் 2021 வரை மட்டுமே வழங்கியுள்ளது. நிறுவனத்தின் r.e.li.v.e ஸ்கிராப்பேஜ் திட்டத்தின் ஒரு பகுதியான Kiger தவிர அனைத்து ரெனால்ட் கார்களுக்கும் ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.


ALSO READ | Cheapest SUV: அசத்தலான டாப் கார்களின் விலை, அம்சங்களின் முழுமையான ஒப்பீடு


ரெனால்ட் க்விட்டில் ரூ. 35,000 வரையிலான பலன்கள்


ரெனால்ட் க்விட்டில் நிறுவனம் மொத்தம் ரூ.35,000 வரையிலான நன்மைகளை வழங்குகிறது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளுக்கு ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர ரூ.10,000 வரையிலான லாயல்டி போனஸ் மற்றும் கையிருப்பில் இருக்கும் vin20 கார்களுக்கு ரூ.10,000 வரையிலான மற்ற தள்ளுபடிகளும் கிடைக்கிறது. 


ரெனால்ட் டஸ்டரில் பம்பர் சலுகைகள்


ரெனால்ட் டஸ்ட்டரில் நிறுவனம் ரூ.1.30 லட்சம் வரை பம்பர் சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த நன்மைகளில் ரூ.50,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், RXZ 1.5-லிட்டர் தவிர அனைத்து வகைகளிலும் ரூ.50,000 வரை பணத் தள்ளுபடி மற்றும் ரூ.30,000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை கிடைக்கும். ரெனால்ட் டஸ்ட்டர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.10 லட்சம் வரை சிறப்பு லாயல்டி நன்மை வழங்கப்படுகிறது. கடைசியாக, ரெனால்ட் கேஜரில் ரூ. 10,000 வரையிலான லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 10,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.


ட்ரைபரில் பல்வேறு தள்ளுபடிகள்


ட்ரைபர் எம்பிவியின் 2020 மற்றும் 2021 மாடல்களில் நிறுவனம் பல்வேறு தள்ளுபடிகளை (Car Discounts) வழங்குகிறது. இந்த MPVயின் 2020 மாடலை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.60,000 வரை மொத்த பலனைப் பெறுவார்கள். இந்த நன்மைகளில் ரூ.25,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் ரூ.10,000 வரை கார்ப்பரேட் பலன்கள் ஆகியவை அடங்கும். 


நீங்கள் 2021 மாடலை வாங்க விரும்பினால், ரூ.40,000 வரை மொத்த பலன்களைப் பெறலாம். இந்த சலுகைகளில் ரூ.10,000 வரை பணப் பலன்கள், ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை கிடைக்கும். இந்த MPV-யில் வாடிக்கையாளர்களுக்கு 10,000 ரூபாய் வரை சிறப்பு லாயல்டி போனஸையும் நிறுவனம் வழங்கியுள்ளது.


ALSO READ | இந்த கார்களில் எக்கச்சக்க தள்ளுபடிகள்: ஆண்டின் இறுதியில் அசத்தும் Maruti Suzuki


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR