Maruti Suzuki Discount Offer: 2021 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. ஆண்டின் இறுதியில், பல ஆட்டோ நிறுவனங்கள் நல்ல சலுகைகளை வழங்குகின்றன. நீங்கள் புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரத்தில் அதை வாங்குவது லாபகரமானதாக இருக்கும். நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி தனது கார்களுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. இந்த கார் தள்ளுபடிகளின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
1. Maruti Alto
மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான ஆல்ட்டோ (Maruti Alto) கார்களுக்கு நிறுவனம் அதிக தள்ளுபடியை வழங்கி வருகிறது. மாருதி ஆல்டோவின் எஸ்டிடி வகைகளில் இந்த மாதம் ரூ.20,000 ரொக்க தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. மாருதி ஆல்ட்டோவை வாங்கினால் மொத்தம் 38 ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம். மீதமுள்ள டிரிம்களில், நீங்கள் ரூ.30,000 ரொக்கத் தள்ளுபடியையும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியையும், ரூ.3,000 கார்ப்பரேட் போனஸையும் பெறலாம்.
2. Maruti S Presso
மாருதி சுஸுகி டிசம்பர் 2021 இல் எஸ்-பிரஸ்ஸோவின் பெட்ரோல் மற்றும் CNG BS6 வகைகளில் ரூ.33,000 வரையிலான நன்மைகளை வழங்குகிறது. பெட்ரோல் எஞ்சின் மாடலில் ரூ.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை கிடைக்கும்.
ALSO READ | Tata Nexon EV: வெறும் ரூ.290-ல் இவ்வளவு கிலோமீட்டரா? அசத்தும் மின்சார கார்
3. Maruti Wagon R
இந்த காரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பதிப்புகளில் ரூ.33,000 வரை பலன்களைப் பெறலாம். இதில், நிறுவனம் ரூ.20,000 வரை ரொக்க தள்ளுபடியையும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும், ரூ.3000 கார்ப்பரேட் தள்ளுபடியையும் வழங்குகிறது.
4. Maruti Eeco
டிசம்பர் 2021 இல் Maruti Eeco இல், நிறுவனம் ரூ. 27,500 வரையிலான மொத்த பலன்களை வழங்குகிறது. பெட்ரோல் எஞ்சின் மாடலில் ரூ.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.2500 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை கிடைக்கும்.
5. Maruti Celerio
நிறுவனம் டிசம்பர் 2021 இல் மாருதி செலிரியோவில் (Maruti Celerio) ரூ.15,000 தள்ளுபடியை வழங்குகிறது. இதில் ரூ.5000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்கும்.
ALSO READ | e-auto: கிலோமீட்டருக்கு 50 பைசா செலவு! ஆண்டுக்கு ₹ 45000 சேமிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G