லேப்டாப் என்பது தற்போது அனைவருக்கும் தேவையான அத்தியாவசிய பொட்களில் ஒன்றாக மாறிவிட்டது. இ க்காமர்ஸ் தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விற்பனையில் வெறும் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் நல்ல லேப்டாப் மாடல்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலுவலகப் பணியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், லேப்டாப் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக ஆகிவிட்டது. மிகப்பெரிய மால் முதல், சாதாரண பெட்டிக் கடை வரை, கணிணி தான் வியாபாரத்திற்கான ஆதாரமாக உள்ளது. எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதி இருப்பதால், டெஸ்க்டாப் வகை கம்ப்யூட்டரை விட, மடிக்கணினி என்னும் லேப்டாப் தான் முதல் தேர்வாக உள்ளது.  


புதிய லேப்டாப்பை வாங்க திட்ட டுபவர்கள், அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் ஆகியவற்றில் பம்பர் தள்ளுபடி சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறந்த மாடல் மடிக்கணினிகளை மலிவான விலையில் வாங்கலாம்.


Dell Inspiron 3530


டெல் நல்ல தரமான லேப்டாப் தயாரிப்பில் முன்னணி நிறுவனம். இதில் நீங்கள் 15.6 இன்ச் டிஸ்ப்ளே இந்த கொண்டுள்ள தரமான லேப்டாப்பை 30% தள்ளுபடியில் வாங்கலாம். மிகவும் மெல்லியதாகவும், இலகுவாகவும் இருக்கும் லேப்டாப் பயன்படுத்துவதும், பல இடங்களுக்கு கொண்டு செல்லவும் மிகவும் வசதியானதாக இருக்கும். இந்த லேப்டாப்பின் அசல் விலை ரூ. 53,040 ஆனால் நீங்கள் அமேசானில் இருந்து 30 சதவீத தள்ளுபடியுடன் ரூ.36,990 என்ற விலையில் வாங்கலாம்.


மேலும் படிக்க | உங்க லேப்டாப் ரொம்ப சூடாகுதா... பிரச்சனையை தீர்க்க சில டிப்ஸ்..!


ASUS Vivobook Go 15


ASUS லேப்டாப்பின் அசல் விலை ரூ.70,990 என்றாலும், 46 சதவீத தள்ளுபடியுடன் ரூ.37,990 என்ற விலையில் வாங்கலாம். சில தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் நீங்கள் பணம் செலுத்தினால்,  உங்களுக்கு ரூ.4000 வரை தள்ளுபடி சலுகைகளும் கிடைக்கும். இந்த லேப்டாப் மெல்லியதாகவும், மிக இலகுவாகவும் இருப்பதால் எடுத்துச் செல்லவும் எளிதானது. இது 16ஜிபி/512ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது, இது தவிர, McAfee ஆன்டி-வைரஸும் ஒரு வருடத்திற்கு இலவசமாகக் கிடைக்கும்.  இதில் உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைக்கு ஏற்ப வட்டியில்லா EMI திட்டத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.


Acer Aspire Lite


பிளிப்கார்ட் வழங்கும் சலுகை விற்பனையில், Acer லேப்டாப்பை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். லேப்டாப்பை கிட்டத்தட்ட பாதி விலையில் வாங்கலாம். இதன் ஒரிஜினல் விலை ரூ.62,990. ஆனால், சலுகை விற்பனையில், ரூ.37,990 என்ற விலையில் வாங்கலாம். வங்கி சலுகைகளும் உண்டு. உங்கள் பழைய மடிக்கணினியை கொடுத்து எக்ஸ்சேன்ஞ் சலௌகையையும் பெறலாம். எக்ஸ்சேன்ஞ் மதிப்பு மடிக்கணினியின் மாதிரி மற்றும் நிலையைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


மேலே குறிப்பிட்டுள்ள மடிக்கணினிகளைத் தவிர, மேலும், பல மடிக்கணினிகளிலும் தள்ளுபடிகள் கிடைக்கும். இரண்டு ஈ-காமர்ஸ் தளங்களும் தங்கள் பயனர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகின்றன. எனவே, வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | எச்சரிக்கை... இந்த செயலி உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கிடுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ