ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்டாக யோசித்தால் 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரெட்மீ ஸ்மார்டபோனை வெறும் 749 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம். பிளிப்கார்ட்டில் மெகா எலக்ட்ரானிக்ஸ் விற்பனை தொடங்கியுள்ளது. மே 24 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விற்பைனயில் நீங்கள் விரும்பும் ஸ்மார்ட்போனை மிக மிக குறைவான விலைக்கு வாங்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகமாக 5 ஜி ஸ்மார்ட்போன்களின் சேவையை மக்கள் விரும்பத் தொடங்கியுள்ளதால், இந்த விற்பனையில் அதிகம் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் நீங்களும் 5 ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த சந்தர்பத்தை தவறவிட்டு விடாதீர்கள். 17 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மீ ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக வெறும் 749 ரூபாய்க்கு வாங்கலாம். 


மேலும் படிக்க | நல்ல மைலேஜ்! 22 முதல் 25 ஆயிரம் ரூபாயில் TVS Star City+ பைக் வாங்கலாம் -முழு விவரம்


ரெட்மீ நோட் 10T 5G


ரெட்மீ நோட் 10T 5G 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மொபைல் 16,999 ரூபாய்க்கு வழக்கமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடியாக ரூ.11,999க்கு கிடைக்கிறது. அதாவது, 5000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆஃபர் மட்டுமல்ல இன்னும் சில ஆஃபர்களும் இருக்கின்றன. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு.



Redmi Note 10T 5G எக்ஸ்சேஞ்ச் சலுகை


ரெட்மி நோட் 10டி 5ஜியில் தள்ளுபடி விலையான 11,999 -ல் இருந்து எக்ஸ்சேஞ்ச் சலுகை உண்டு. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை நீங்கள் பெறலாம். ஆனால் உங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருந்தால் மற்றும் சமீபத்திய மாடல் இருந்தால் மட்டுமே ரூ.11,250 தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் முழு ஆஃபரையும் பெற்றீர்கள் என்றால், வெறும் 749 ரூபாய்க்கு Redmi Note 10T 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்.  


ரெட்மீநோட் 10T 5G சிறப்பம்சம்


Redmi Note 10 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த போனில் MediaTek Dimensity 700 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையில் இயக்கும். இந்த ஃபோனில் மூன்று பின்புற கேமரா இருக்கும். 48MP முதன்மை கேமராவும்,  8MP செல்பி கேமராவும் இடம்பெற்றிருக்கும் 5000mAh பேட்டரியையும் கொண்டிருக்கும்.


மேலும் படிக்க | ஹேக்கிங் முறையாக கற்றுக் கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR