BYD eMAX 7 காருக்கான முன்பதிவு தொடங்கியாச்சு! இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற இந்த கார் விலை என்ன தெரியுமா?
BYD eMAX 7 காருக்கான முன்பதிவு தொடங்கியது. ₹51000க்கு இந்த பிரீமியம் காரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அட்டகாசமான சலுகைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்...
செப்டம்பர் 21ம் நாளான இன்று BYD eMAX 7க்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கியது. இன்று முதல் அக்டோபர் 8 வரை வாகனத்திற்கு முன்பதிவு செய்பவர்களில் முதல் 1000 பேருக்கு பல்வேறு சலுகைகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் அல்லது விற்பனை நிலையங்களுக்குச் சென்று வாடிக்கையாளர்கள் இந்த காரை முன்பதிவு செய்யலாம்.
BYD கார் தயாரிப்பு நிறுவனம்
உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, இந்திய சந்தையில் மற்றொரு தயாரிப்பை அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது. நிறுவனம் தனது பல்நோக்கு வாகனமான BYD eMAX 7 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கும் சில வாரங்களுக்கு முன்னதாக, முன்பதிவை தொடங்கிவிட்டது.
அக்டோபர் 8ம் தேதியன்று கார் சந்தைக்கு வந்துவிடும். இந்திய குடும்பங்களின் தேவைகளை மனதில் வைத்து அதற்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காரில் BYD தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முன்பதிவு தொகை
51,000 ரூபாயை கட்டி, BYD eMAX 7 காரை முன்பதிவு செய்யலாம். இந்த காரில் 8-இன்-1 மின்சார பவர்டிரெய்ன் பொருத்தப்பட்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் முதல் மின்சார பிரீமியம் MPVயான BYD e6 இன் வெற்றிக்குப் பிறகு, இப்போது நிறுவனம் BYD eMAX 7 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
1000 வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள்
இந்த காரை முன்பதிவு செய்யும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 8, 2024க்குள் இந்த காரை முன்பதிவு செய்யும் 1000 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 51000 மதிப்புள்ள அற்புதமான பலன்கள் கிடைக்கும், அத்துடன் 7kw அல்லது 3kw சார்ஜரும் வழங்கப்படும்.
சலுகைக்காலம்
அக்டோபர் 8 ஆம் தேதிக்கு முன் இந்த காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கும், மார்ச் 25, 2025க்கு முன் இந்த காரை டெலிவரி எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். இந்த காரை வெறும் வாகனம் என்ற அளவில் அடக்கிவிட முடியாது என்று நிறுவனத்தின் எலக்ட்ரிக் பயணிகள் வாகனப் பிரிவின் வணிகத் தலைவர் ராஜீவ் சவுகான் தெரிவித்தார்.
NEV சந்தையில் BBD உலகளாவிய முன்னணி
புதிய மின்சார வாகனங்களை தயாரிப்பதில் BYD நிறுவனம் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் இதுவரை இந்திய சந்தையில் 23 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. பயணிகள் கார்கள், பேருந்துகள், லாரிகள் என பல்வேறு வகையிலான வாகனத் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள BYD நிறுவனத்தின் eMAX 7 காருக்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
BYD eMAX 7 விலை
eMax 7 காரின் விலை 30 லட்சம் முதல் ரூ 33 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. BYD eMax 7 கார், Toyota Innova Hycross மற்றும் Maruti Suzuki Invicto ஆகியவற்றுடன் போட்டிபோடும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க | 7 seater: குதூகலமா குடும்பத்தோட நல்லது கெட்டதுக்கு போக இந்த வண்டிகள் பெஸ்ட் சாய்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ