ஹூண்டாய் கார் வாங்க இதுவே சரியான நேரம்; அதிரடி தள்ளுபடி அறிவிப்பு
ஹூண்டாய் கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார்களுக்கு இந்த மாதத்திற்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் பன்முக கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் சேன்ட்ரோ, ஐ10 நியாஸ், அவுரா ஆகிய மாடல்களும் அடங்கும்.
இந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களை கவரவும், அவர்களின் விற்பனையை அதிகரிக்கவும் கார் தயாரிப்பு நிறுவனம் தனது கார்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்கி வருகிறது. அதன்படி ஹூண்டாய் நிறுவனம் அதன் சான்ட்ரோ முதல் கிராண்ட் ஐ10 நியோஸ் வரையிலான சிறிய கார்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. மே மாதத்திற்கான தள்ளுபடியானது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு கார்களிலும் வழங்கப்படுகிறது. இந்த மாத தள்ளுபடி திட்டத்தில் சான்ட்ரோ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா சப்-காம்பாக்ட் செடான் போன்ற மாடல்கள் அடங்கும்.
ஹூண்டாய் சான்ட்ரோ (பெட்ரோல்)
ஹூண்டாய் நிறுவனம் சான்ட்ரோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் வகைக்கு ரூ.28,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. இதில் ரூ.15,000 வரை ரொக்க தள்ளுபடிகள், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3000 வரை கார்ப்பரேட் சலுகைகள் அடங்கும். சான்ட்ரோவின் பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை ரூ.4.90 லட்சம் ஆகும்.
மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான பைக்குகளை வாங்கணுமா? சிறந்த பைக்குகளின் பட்டியல் இதோ
ஹூண்டாய் சாண்ட்ரோ (சிஎன்ஜி)
ஹூண்டாய் சான்ட்ரோவின் சிஎன்ஜி மாடல்களுக்கும் நிறுவனம் தள்ளுபடியை வழங்குகிறது. சலுகையின் கீழ், இந்த காருக்கு ரூ.13,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3000 வரையிலான கார்ப்பரேட் சலுகையும் அடங்கும். சான்ட்ரோவின் சிஎன்ஜி மாடலின் ஆரம்ப விலை ரூ.6.10 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (பெட்ரோல்)
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலில் ரூ.23,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.15,000 வரை ரொக்க தள்ளுபடிகள், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3000 வரை கார்ப்பரேட் சலுகைகள் அடங்கும்.கிராண்ட் ஐ10 நியோஸ் பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை ரூ.5.39 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (சிஎன்ஜி)
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் சிஎன்ஜி மாடலில் ரூ.13,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3000 வரையிலான கார்ப்பரேட் சலுகையும் அடங்கும். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி மாடலின் ஆரம்ப விலை ரூ.7.17 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் ஆரா (பெட்ரோல்)
ஹூண்டாய் அதன் சப்காம்பாக்ட் செடான் காரான ஆராவின் பெட்ரோல் வகைக்கு ரூ.23,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. இதில் ரூ.15,000 வரை ரொக்க தள்ளுபடிகள், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3000 வரை கார்ப்பரேட் சலுகைகள் அடங்கும். ஹூண்டாய் ஆரா காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை ரூ.6.09 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் ஆரா (டர்போ)
ஹூண்டாய் ஆரா டர்போ மாடலில் மொத்தம் ரூ.48,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.35,000 வரை ரொக்க தள்ளுபடிகள், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3000 வரை கார்ப்பரேட் சலுகைகள் அடங்கும். ஹூண்டாய் ஆரா டர்போ மாடலின் ஆரம்ப விலை ரூ.8.87 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் அவுரா (சிஎன்ஜி)
ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி மாடலில் ரூ.13,000 வரை தள்ளுபடி உள்ளது. இதில் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3000 வரையிலான கார்ப்பரேட் சலுகையும் அடங்கும். ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி மாடலின் விலை ரூ.7.88 லட்சம் ஆகும்.
மேலும் படிக்க | எலக்டிரிக் கார் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான 4 முக்கியமான டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR