கார்களின் விலை உயர்வு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பல விஷயங்கள் மலிவானதாகவும் அல்லது விலை உயர்ந்ததாகவும் ஆகலாம். ஆனால், தற்போது கார்களைப் பற்றி பேசுகையில், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பல கார்களின் விலைகள் அதிகரித்துள்ளன. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பல கார் உற்பத்தியாளர்கள் தங்கள் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விலையுயர்ந்த கார்களின் விவரத்தை இங்கே பெறுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

-- ஹூண்டாய் மோட்டார் இந்தியா i20 ஹேட்ச்பேக் மாடல் சீரிஸின் விலையை ரூ.21,500 வரை உயர்த்தியுள்ளது. இதற்குப் பிறகு, ஹேட்ச்பேக்கின் விலை ரூ.7.18 லட்சம் முதல் ரூ.10.91 லட்சத்திற்குள் உயர்ந்துள்ளது.


மேலும் படிக்க | பட்ஜெட்டுக்கு முன் ரூ.500 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!


-- மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்யூவி விலை ரூ.85,000 வரை அதிகரித்துள்ளது. இப்போது, ​​அதன் S மற்றும் S11 வகைகள் முறையே ரூ.12.84 லட்சம் மற்றும் ரூ.16.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கின்றன.


-- மஹிந்திரா XUV700 விலையை ரூ.64,000 வரை உயர்த்தியுள்ளது. SUV மாடல் வரிசை தற்போது 23 வகைகளில் (பெட்ரோல் மற்றும் டீசல்) MX மற்றும் AX ஆகிய இரண்டு தொடர்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.13.45 லட்சம் முதல் ரூ.25.48 லட்சம் வரை உயர்த்தியுள்ளது.


-- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஐசிஇ பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. நிறுவனம் 1.2 சதவீதம் வரை விலையை உயர்த்தியுள்ளது. இந்த நிறுவனம் Tiago, Altroz, Tigor, Punch, Nexon, Harrier மற்றும் Safari போன்ற கார்களை விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


-- மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் தனது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன் மாடல் வரிசையின் விலைகள் சுமார் 1.1 சதவீதம் அதிகரித்துள்ளது, இது ஜனவரி 16, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஆல்டோ, வேகன்ஆர், பலேனோ போன்ற பிரபலமான கார்களின் விலையை உயர்ந்துள்ளன.


மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் NRI-களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா நிதியமைச்சர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ