டிஜிட்டல் யுகத்தில் செயலிகள் புழக்கத்துக்கு வந்தபிறகு சாட்டிங்கில் காதலர்களை தேடுவது இயல்பாகிவிட்டது. வீட்டில் இருந்தபடியே டேட்டிங் ஆப்பில் (Dating App) பிடித்தவர்களுடன் பழகத்தை ஏற்படுத்திக் கொண்டு, பழகும் பிரபலங்கள் மன ஒற்றுமை ஏற்பட்டால் திருமணத்ததையும், இல்லையென்றால் பிரிவையும் தேர்ந்தெடுக்கிறார்கள். டேட்டிங் செயலிகள் பல இருந்தாலும், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை என பிரபலங்கள் உறுப்பினராக இருக்கும் ஒரு டேட்டிங் ஆப் மிகவும் பிரபலம். இந்த செயலியில் உறுப்பினராக சேருவதற்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டார் காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அப்படி ஒரு ஆடை அணிந்து ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த மல்லிகா


ராயா செயலி (Raya App )


பென் அஃப்லெக், ட்ரூ பேரிமோர், ஜான்வி கபூர், வாணி கபூர் என பல பிரபலங்களும் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த செயலி மூலம் தங்களுக்கான காதலரை தேடிப்பிடித்த அவர்கள், ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். சிலர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு புதியவர்களுடன் டேட்டிங் செய்துள்ளனர். இந்த செயலியின் விஷேஷம் என்னவென்றால், பணக்காரர்கள், பிரபலமானவர்கள் மட்டுமே ராயா டேட்டிங் செயலியை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் இந்த செயலி மூலம் தங்களுக்கான டேட்டிங் பார்ட்னரை தேடிப் பிடிக்கின்றனர். 


யாருக்கெல்லாம் கிடைக்கும்?


இந்த தகவலை பார்த்தவுடன் நீங்களும் ராயா டேட்டிங் ஆப்-ஐ பயன்படுத்தலாம் என்ற எண்ணம் வரும். ஆனால் இந்த டேட்டிங் செயலியை ஆப்பிள் ஐஓஎஸ் போன் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், இந்த செயலியை பயன்படுத்த விரும்பினால், உங்களின் சுயவிவரம் சரிபார்த்த பின்னரே பயன்படுத்த அனுமதிக்கப்படுவீர்கள். மேலும், சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் உடனடியாக அந்த செயலியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.



லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, ராயா செயலியை பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுயவிவரக்குறிப்பை பதிவு செய்து அனுமதிக்காக காத்திருக்கின்றனர். 


கட்டணம் எவ்வளவு?


இந்த செயலியில் உறுப்பினராக இருப்பவர்கள் மாதந்தோறும் 8 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கான பார்ட்னரை தேடிப்பிடிக்க சரியான செயலியாக ராயா டேட்டிங் செயலி இருக்கும்.


மேலும் படிக்க | மேலும் படிக்க: பீஸ்ட் படத்திற்கு பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் - இத்தனை கோடிகளா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR