Redmi 12 5G Launch: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட் Xiaomi ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒரு பிரம்மாண்டமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி Redmi 12 5G போனை வெளியிட உள்ளதாக  நிறுவனம் உறுதி செய்துள்ளது. நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிமுகம் ஆகவுள்ள ஸ்மார்ட்போனின் ஒரு முன்னோட்டத்தை வழங்கியுள்ளது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன், Redmi 12 5G இன் சேமிப்பு மாடல்களின் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது. இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, மூன்ஸ்டோன் சில்வர் கலர் ஆப்ஷன், கிரிஸ்டல் கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் 50எம்பி கேமராவுடன் இது வெளியிடப்படும். மேலும், இது 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதன் சாத்தியமான விலை, அம்சங்கள் முதல் அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Redmi 12 5G: ஸ்டோரேஜ் மற்றும் விலை


Redmi 12 5G இரண்டு மாடல்களில் வழங்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் 6 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு, இரண்டாவது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன் இருக்கக்கூடும். விலையைப் பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாறுபாட்டின் விலை ரூ.9,999 ஆகவும், 8ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.13,999 ஆகவும் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.


Redmi 12 5G: கசிந்த விவரக்குறிப்புகள் 


Redmi 5G இன் பிராடெக்ட் பேஜ் ஏற்கனவே Xiaomi -யின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அங்கு நிறுவனம் தொலைபேசி தொடர்பான சில விவரக்குறிப்புகளின் விவரங்களைப் பகிர்ந்துள்ளது. எல்இடி சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை Redmi 12 5G இல் காணலாம். மேலும், இது ஃபிலிம் ஃபில்டர்களுடன் கூடிய 50எம்பி பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கலாம்.


மேலும் படிக்க | பிரபலங்களின் போட்டோக்களுக்கு ஒரு லைக் போட்டால் ரூ. 3000 - புது சைபர் மோசடி... சிக்காதீங்க பசங்களா! 


Redmi 12 5G: வடிவமைப்பு


இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள போனின் படத்தின் படி, Redmi 12 5G ஃபோன் ஒரு கிரிஸ்டல் கிளாஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ரெயின்போவின் அம்சத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இது 5,000mAh பேட்டரி மற்றும் செல்ஃபி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட்அவுட்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Redmi 12 5G: இந்த அம்சங்கள் இருக்கக்கூடும்


Redmi 12 5G ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய 6.79-இன்ச் FHD + டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1080 X 2400 பிக்சல் ரெசல்யூஷன் ஆகியவை இருக்கும். இது MediaTek Helio G88 12nm செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது Mali-G52 2EEMC2 GPU உடன் இணைக்கப்படும்.


Redmi 12 5G: ப்ராசசர்


Redmi 12 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 இல் இயங்கும். தொலைபேசியின் இயங்குதளமானது பல தனியுரிமை அம்சங்கள், வலுவான செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பயனர்களுக்கு வலுவான அனுபவத்தை அளிக்கும்.


Redmi 12 5G -இல் என்ன சிறப்பு?


இந்த மொபைல் போனில் பிரதான கேமரா 50MP, அல்ட்ரா-வைட் 8MP மற்றும் மேக்ரோ சென்சார் 2MP ஆகியவை போனின் பின்புறத்தில் கிடைக்கின்றன. அதே நேரத்தில், 8MP கேமரா முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு கிடைக்கிறது.


மேலும் படிக்க | DeepFake AI: ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாகும் போலிகள் - வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ