Atum 1.0 Electric Bike: பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் முதல் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை, மின்சார இயக்கத்திலும் மின்சார வாகன உற்பத்தியிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றன. புதிய மின்சார வாகனங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் (Automobile Private Limited) அத்தகைய ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும். அதன் மின்சார பைக்கான Atum 1.0-ஐ குறைந்த விலையில், குறைந்த பராமரிப்பில், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் பதிவு கூட செய்யாமலும் இயக்கலாம். குறைந்த வேக மின்சார வாகனமான ஆட்டம் 1.0-ஐ ஒரு கிலோமீட்டருக்கு இயக்குவதற்கான செலவு 10 பைசா மட்டுமே என்று நிறுவனம் கூறுகிறது. குறுகிய தூர பயணத்திற்கு இந்த ஸ்கூட்டர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். Atum 1.0-ஐ பற்றி இந்த பதிவில் காணலாம்.


100% இந்தியாவில் தயாரிக்கப்பட்டது


இந்த வாகனம், சுற்றுச்சூழலுக்கு ஏதுவான வாகனமாக, பாதுகாப்பான மற்றும் சுத்தமான எரிபொருள் இயக்கத்திற்கான ஸ்மார்ட் வாகனமாக இருக்கும் என்று Atumobile Pvt Ltd கூறுகிறது. இது 100% 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது'. குறுகிய தூர பயணத்திற்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று, வெறும் ரூ .3,000 க்கு இதை ப்ரீ-ஆர்டர் புக்கிங் செய்ய முடியும். இந்த வாகனத்தை வாங்க வேண்டாம் என வாடிக்கையாளர்கள் திடீரென முடெவெடுத்தால், இந்த தொகை மீண்டும் அளிக்கப்படும். இந்த இலகுரக பைக்கின் எடை 35 கிலோ ஆகும்.


Atum 1.0-ன் விலை


Atum 1.0 இன் ஆரம்ப விலை ரூ .54,999 ஆகும். இதில், வாடிக்கையாளர் ஷிப்பிங் மற்றும் ஜிஎஸ்டி (GST) தொகையை கூடுதலாக செலுத்த வேண்டும். பின் கோட் கிடைப்பதன் அடிப்படையில் இந்த பைக்கை இந்தியா முழுவதும் வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. Atum 1.0 க்கு ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த முடியும். அதன் விலை நகரத்துக்கு நகரம் மாறுபடக்கூடும்.


ALSO READ: Tata Tigor EV: அட்டகாசமாக அறிமுகம் ஆன இந்த மின்சார காரின் முழு விவரங்கள் இதோ


RC, DL தேவைப்படாது


Automobile Pvt Ltd படி, இது குறைந்த வேக மின்சார பைக் (Electric Bike) ஆகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும். ஸ்டாப் அண்ட் கோ வகை பயணங்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த வேகம் கொண்ட மினாசார பைக்காக இருப்பதால், இதற்கு பதிவு அல்லது ஓட்டுநர் உரிமம் (Driving License) தேவைப்படாது. இது ஒரு இலகுரக பேட்டரியைக் கொண்டுள்ளது.


ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணம் செய்யலாம்


Atum 1.0-இல் 48V, 26Ah போர்ட்டபிள் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இதில் 250W மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரியின் சிறப்பு என்னவென்றால், அதை மாற்ற முடியும். இது 3-4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இதில் 100 கிமீ பயணிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. வாடிக்கையாளர் பேட்டரியில் 2 வருட உத்தரவாதத்தைப் பெறுவார். பேட்டரியின் மொத்த எடை 6 கிலோ ஆகும்.


வெறும் 10 பைசாவில் 1 கிமீ பயணம்


Atumobile Pvt Ltd-ன் Atum 1.0 பைக்கை இயக்குவதற்கான செலவு பெட்ரோல் பைக்கை விட மிகக் குறைவு என்று நிறுவனம் கூறுகிறது. நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் தகவலின் படி, இந்த பைக்கை ஓட்டுவதற்கான செலவு ஒரு கிமீ-க்கு 10 பைசா ஆகும். அதாவது, இந்த பைக்கில் 100 கிமீ வரை பயணம் செய்ய ரூ. 7-10 ரூபாய்தான் செலவாகும்.


ALSO READ: Ola அடுத்த அதிரடி: விரைவில் வருகிறது ஓலா மின்சார கார், விவரம் இதோ!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR