புதுடில்லி: உங்களுக்கு OnePlus ஸ்மார்ட்ஃபோன்கள் பிடிக்கும் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயன்படும். நிறுவனம் இப்போது அது அறிமுகப்படுத்தப்போகும் OnePlus 9 தொடர் ஸ்மார்ட்ஃபோனுடன் மிகவும் மலிவான ஒரு ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களை உடனடியாக அறிந்து கொள்ளலாம்.


புதிய OnePlus 9 R அறிமுகப்படுத்தப்பட உள்ளது


எங்கள் கூட்டாளர் வலைத்தளமான bgr.in படி, OnePlus 9 R ஸ்மார்ட்போன் (Smartphone) மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செய்திகளின்படி, இது OnePlus 9 தொடரின் மலிவான பதிப்பாக கருதப்படுகிறது.


OnePlus 9 –ல் அட்டகாசமான பிராசசர் உள்ளது


கிடைத்த தகவல்களின்படி, நிறுவனம் OnePlus 9 R-இல் மிகவும் வலுவான பிராசசரை வழங்கப் போகிறது. அந்த அறிக்கையின்படி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் புதிய OnePlus 9 R- இல் வழங்கப்படுகிறது. மெமரி பற்றி பேசினால், OnePlus 9 R-இல் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொடுக்கப்படக்கூடும்.


ALSO READ: 7000mAh பேட்டரியுடன் Samsung இன் சிறந்த ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் பெறுங்கள்


அடுத்த மாதம் இது சந்தையில் அறிமுகமாக வாய்ப்புள்ளது


OnePlus 9 இன்னும் வெளியிடப்படவில்லை. மிகவும் சிக்கனமான ஃபோனாகக் கருதப்படும் OnePlus 9 R, OnePlus 9 உடன் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படலாம். இதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்துள்ளது.


சமீபத்தில் டிப்ஸ்டர் இவான் பிளாஸ் இந்த புதிய தொலைபேசியின் பெயரை வெளிப்படுத்தி மூலக் குறியீட்டைப் பகிர்ந்துள்ளார். இருப்பினும், OnePlus 9 R பற்றிய பிற தகவல்கள் இன்னும் பகிரப்படவில்லை.


விவரக்குறிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்


கிடைத்த தகவல்களின்படி, இந்த புதிய OnePlus 9 R ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கிடைக்கக்கூடும். இது தவிர, தொலைபேசியில் பயனர்களுக்கு FHD + தெளிவுத்திறன் (Resolution) வழங்கப்படக்கூடும். கேமராவைப் பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போநில் 64MP முதன்மை கேமரா மற்றும் 8MP அகல கோண லென்ஸ் கிடைக்கக்கூடும். இந்த புதிய தொலைபேசியில் 5000mAh பேட்டரி கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.


ALSO READ: TV வாங்கினால் Phone ஃப்ரீ! Samsung இன் சூப்பர் மெகா ஆப்பர் அறிமுகம்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR