Infinix HOT 20 5G: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. உங்கள் பட்ஜெட் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்து, அந்த பட்ஜெட்டில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை உங்களால் வாங்க முடியாது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்!! ஏனெனில், குறைவான பட்ஜெட்டிலும் நல்ல ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பதுதான் உண்மை. இந்தியாவின் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் அதன் தேவையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பயனருக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த பதிவில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த அனைத்து விவரக்குறிப்புகளையும், சிறப்பம்சன்ங்களையும் பற்றி தெரிந்துகொள்ளலாம். 


மிகவும் மலிவான ஸ்மார்ட்போன்: அம்சங்கள் என்ன?


மிக மலிவான அந்த ஸ்மார்ட்போன் Infinix HOT 20 5G ஆகும். இது அனைத்து ஸ்மார்ட்போன்களையும் விட மிக மலிவாக கிடைக்கும் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் வாங்கலாம். 


மேலும் படிக்க | காதலர் தின ஸ்பெஷல்..ஜியோ பயனர்களுக்கு மெக்டொனால்ட்சு பர்கர் இலவசம் 


அம்சங்கள்


இந்த ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனலை பெறுவார்கள். இது முழு HD+ தெளிவுத்திறனையும் 120HZ புதுப்பிப்பு வீதத்தையும் கொண்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர், பவர் பட்டன் உள்ளன. 


விலை விவரங்கள்


விலையைப் பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 17,999 ஆகும். எனினும், 38% தள்ளுபடி இதில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு இந்த விலை ரூ. 10,999 ஆக குறையும். நீங்கள் இந்த விலையை மேலும் குறைக்கலாம். Flipkart Axis பேங்க் கார்ட் கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ஐந்து சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். இது மட்டுமின்றி, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ. 750 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை ரூ. 10,000-க்கும் குறைவாக வாங்க முடியும். 


இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 5ஜி: கேமரா


Infinix Hot 20 5G இன் கேமராவைப் பற்றி பேசுகையில், இது 50MP மற்றும் 8MP இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா இருக்கும். ஃபோனில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் கிடைக்கும். ஆனால் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டின் உதவியுடன் சேமிப்பகத்தை அதிகரிக்கலாம்.


Infinix Hot 20 5G: பேட்டரி


இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜியில் பேட்டரி ஒரு வலுவான பேட்டரியாகும். போனில் டைப்-சி போர்ட்டில் 18W சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரி உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ரூ.155க்கு அசத்தல் ஆப்பரை வழங்கியுள்ள ஏர்டெல்! சிறப்பம்சங்கள் என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ