பிளிப்கார்டில் மெகா தள்ளுபடி விலையில் Nothing மொபைல்..!

Nothing Phone 1 Deal: பிளிப்கார்ட்டில் மெகா தள்ளுபடி விலையில் நத்திங் மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது. 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் இந்த மொபைலை ஆஃபர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளுடன் 6 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்க முடியும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 12, 2023, 05:54 PM IST
பிளிப்கார்டில் மெகா தள்ளுபடி விலையில் Nothing மொபைல்..!  title=

பிளிப்கார்ட் நிறுவனம் இப்போது நத்திங் மொபைலுக்கு பெரும் தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது. மலிவு விலையில் மொபைல் தேடுபவர்கள் மற்றும் ஆஃபரில் மொபைல் வாங்கிக் கொள்ளலாம் என நினைப்பவர்கள் எல்லாம் நத்திங் மொபைலுக்கு பிளிப்கார்ட் கொடுத்திருக்கும் ஆஃபரை கருத்தில் கொண்டு வாங்குவதற்கு பரிசீலிக்கலாம். வெறும் ஆஃபர் மட்டும் கொடுக்கப்படவில்லை. நத்திங் மொபைலுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. என்னென்ன சலுகைகள் என இங்கே பார்க்கலாம்.  

Nothing Phone தள்ளுபடி 

Nothing Phone One மொபைல் பிளிப்கார்ட்டில் வழக்கமாக 26,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் மொபைல் தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த மொபைல் ஆப்சன்களை தெரிந்து கொண்டு, வாங்குவதற்கு பரிசீலிக்கலாம். இந்த மொபைலுக்கு இப்போது ஆஃபர் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படுள்ளன. அனைத்து சலுகைகளையும் நீங்கள் முறையாக பெற்றுக் கொண்டால் வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் Nothing Phone One மொபைலை நீங்கள் வாங்கலாம்.    

மேலும் படிக்க | Flipkart Sale: காதலர் தினத்தை ஒட்டி சாம்சங் போனில் கன்னாபின்னானு தள்ளுபடி, முந்துங்கள்!!

Nothing Phone சலுகை

Nothing Phone ஒன் மாடலின் விலை ரூ. 26,999. எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.21,250 Flipkart வழங்குகிறது. உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஸ்மார்ட்போனின் நிலை நன்றாக இருந்தால், அது நிறுவனத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், நீங்கள்  ரூ.21,250 எக்ஸ்சேஞ்ச் போனஸை வெல்லலாம். இந்த போனஸ் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்பட்சத்தில் வெறும் ரூ.5,649-க்கு Nothing Phone ஒன் மொபைலை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

மேலும் படிக்க | இந்தியாவின் ’லித்தியம் புதையல்’ பேட்டரி துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளும்..! எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News