இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹோண்டா டூ-வீலர்ஸ் ஷைனின் 10 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது நிறுவனம் அதன் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களுக்கு பைக் மீது கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சிறப்பு சலுகையில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,999 வரை குறைந்த முன்பணம் செலுத்தி ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. ஹோண்டா ஷைனில், இந்த ஆஃப் மார்ச் 31, 2022 வரை மட்டுமே கிடைக்கும், மேலும் குறிப்பிட்ட டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் மட்டுமே கேஷ்பேக் வழங்கப்படும். இஎம்ஐ செய்யும் போது மட்டுமே கிடைக்கும் இந்த சலுகை குறைந்தபட்சம் ரூ.30,000 பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

125சிசி பிரிவில் 1 கோடி வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்ட முதல் பைக் இது என்று நிறுவனம் கூறுயது. அதன்படி 125 சிசி பிரிவில் ஹோண்டாவின் அதிகம் விற்பனையாகும் பைக் இதுவாகும். செயல்திறன் அடிப்படையில் இந்த பைக் சிறந்தது என்று கூறப்படுகிறது. உண்மையில், இந்த பைக்கில் 123.94 சிசி சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், எஸ்ஐ இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது, இது 7500 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 7.9 கிலோவாட் ஆற்றலையும், 6000 ஆர்பிஎம்மில் 11 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இதன் இன்ஜினில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க | Technology Cars: 2022ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பக் கார்கள்! Glanza முதல் BMW iX Flow வரை 


ஹோண்டா ஷைன் இந்திய சந்தையில் 5 வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இவற்றில், டீசென்ட் புளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே, ஜெனி கிரே மெட்டாலிக் மற்றும் ரெபெல் ரெட் மெட்டாலிக் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹோண்டா ஷைனின் நீளம் 2046 மிமீ, அகலம் 737 மிமீ மற்றும் உயரம் 1116 மிமீ உள்ளது. இதில் வீல்பேஸ் 1285 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 162 மிமீ உள்ளது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆகிய இரண்டு வகைகளின் கர்ப் எடை 114 கிலோ ஆகும். இது 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கையும் பெறுகிறது.


மோட்டார் சைக்கிள்களின் விலையும் விண்ணைத் தொடும் இத்தகைய காலகட்டத்தில், சாமானியர்களின் பாக்கெட் மற்றும் தேவைக்கேற்ப இந்த பைக்கின் விலை சரியாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் டிரம் பிரேக் விலை ரூ.74,943 டெல்லி எக்ஸ்-ஷோரூம் ஆகும், இது டிஸ்க் பிரேக் மாறுபாட்டின் விலை ரூ.79,343 ஆக உள்ளது.


மேலும் படிக்க | குறைந்த விலையில் Ola S1 Pro வாங்க இதுவே கடைசி வாய்ப்பு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR