ஓலா எஸ்1 ப்ரோ: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரின் விலையை அடுத்த கொள்முதல் சாளரத்தில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மார்ச் 17-18 தேதிகளில் ஹோலி பண்டிகையுடன் அடுத்த கொள்முதல் சாளரத்தை நிறுவனம் தொடங்க உள்ளது. ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விலை உயர்வை அறிவித்தார். விலைவாசி உயர்வு எவ்வளவு என்பது குறித்து எந்த விவரமும் தற்போது வரை வழங்கப்படவில்லை.
பவிஷ் அகர்வால் ட்வீட் செய்துள்ளார்
அகர்வால் ஒரு ட்வீட்டில், "ஏற்கனவே எஸ்1 ப்ரோவை வாங்கிய அனைவருக்கும் நன்றி மற்றும் அவர்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது எஸ்1 ப்ரோவை வாங்கியவர்களுக்கு சிறப்பு நன்றி. இந்த ஸ்கூட்டர் ஐ 129,999 இல் பெறுவதற்கான கடைசி வாய்ப்பு இதுவே. அடுத்த விண்டோவில் விலையை உயர்த்துவோம்." என்றார்.
மேலும் படிக்க | ஓபன் ரோர் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மோட்டர் சைக்கிள்
Thanks to all who’ve purchased S1 Pro already and special thanks to those who've bought their 2nd or 3rd S1 Pro!
Last chance to get it for 129,999. We'll be raising prices in the next window. This window ends 18th midnight!
Buy now, only on the Ola app! pic.twitter.com/I7FF0GlXQD— Bhavish Aggarwal (@bhash) March 17, 2022
புதிய வண்ண வகையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
மூன்றாம் கட்ட விற்பனையின் போது ஈ.வி-தயாரிப்பாளர் புதிய வண்ண வகையையும் அறிமுகப்படுத்தினார். புதிய காவி நிறம் இந்த விற்பனைக்கு மட்டுமே. ஓலா எஸ்1 ப்ரோவின் விலை ரூ.1,29,999 ஆகவும், ஓலா எஸ்1-ன் விலை ரூ.99,999 ஆகவும் வைக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் மதிப்பு $5 பில்லியன்
ஓலா எலக்ட்ரிக் முன்பு டெக்னே பிரைவேட் வென்ச்சர்ஸ், அல்பைன் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட், எடெல்வீஸ் மற்றும் பலவற்றிலிருந்து $200 மில்லியன் திரட்டியதாக அறிவித்தது. சமீபத்திய சுற்றில் நிறுவனத்தின் மதிப்பு $5 பில்லியன் ஆகும்.
கடந்த 12 மாதங்களில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஃபியூச்சர் ஃபேக்டரியை உருவாக்கியுள்ளது, அது இப்போது சுமார் 1000 யூனிட் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வருவதாக அகர்வால் முன்னதா கூறியிருந்தார்.
மேலும் படிக்க | Best E Bikes: இவைதான் நாட்டின் மிகச்சிறந்த மின்சார பைக்குகள்: விலை, பிற விவரங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR