ரூ.200-ஐ விட குறைந்த விலையில் செம ஸ்பீட்: ஏர்டெல், ஜியோவுக்கு தலைவலியாய் வந்த திட்டம்
Excitel: Excitel, இப்போது அதன் 300 Mbps திட்டத்தை மாதத்திற்கு வெறும் 167 ரூபாய்க்கு வழங்குகிறது. இது நிறுவனம் வழங்கும் ஒரு குறிப்பிட்ட கால ஆன்போர்டிங் சலுகையாகும்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இணைய சேவை வழங்குனரான (ISP) Excitel, இப்போது அதன் 300 Mbps திட்டத்தை மாதத்திற்கு வெறும் 167 ரூபாய்க்கு வழங்குகிறது. இது நிறுவனம் வழங்கும் ஒரு குறிப்பிட்ட கால ஆன்போர்டிங் சலுகையாகும். அதாவது பழைய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. மாதத்திற்கு ரூ.167-க்கான இந்த சலுகை புதிய பயனர்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். இதற்குப் பிறகு, நிறுவனம் வழங்கும் தற்போதைய கட்டணத்தை பயனர்கள் தொடர வேண்டும்.
Excitel 300 Mbps: மாதத்திற்கு ரூ.167 மட்டுமே
பயனர்களுக்கு 300 Mbps திட்டத்தை பெறும் விருப்பம் இருந்து, ஆனால், அந்த வேகம் உங்களுக்குத் தேவைப்படுமா என்பதை அவர்கள் பார்க்க விரும்பினால், அதைச் சோதித்துப் பார்க்க இதுவே சிறந்த நேரமாக இருக்கும். மகாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும் பயனர்களுக்கு Excitel ஒரு புதிய ஆன்போர்டிங் வரையறுக்கப்பட்ட நேர சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயனர்கள் மாதம் வெறும் 167 ரூபாய்க்கு 300 Mbps பெற முடியும்.
மேலும் படிக்க | பிளிப்கார்ட்டில் நடைபெறும் நூதன மோசடி! தடுக்க ஸ்மார்டாக செயல்படுங்கள்
3 மாதங்களுக்கு 501 ரூபாய் வழங்க வேண்டும்
பயனர்கள் மூன்று மாதங்களுக்கு இந்த திட்டத்தை வாங்க வேண்டும். எனவே வாடிக்கையாளருக்கான மொத்த செலவு ரூ.167 x 3 = ரூ.501 ஆக இருக்கும். இந்த கட்டணத்தில் இறுதி பில்லில் வரிகளும் அடங்கும். இதில் நிறுவல் கட்டணங்கள் எதுவும் இல்லை என்பது இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் முக்கிய அம்சமாக இருக்கும். நிறுவனம் ONU சாதனத்திற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு முறை ரீஃப்ண்ட் செய்யக்கூடிய செக்யூரிட்டி செபாசிட் தொகையாக ரூ.2000ஐப் பெறுகிறது.
வாடிக்கையாளர்கள் 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதத் திட்டங்களை வாங்க விரும்பினால், அவர்கள் Excitel இன் 300 Mbps திட்டத்தை OTT (ஓவர்-தி-டாப்) பலன்களுடன் ரூ. 100/மாதம் + GST என்ற பெயரளவு கட்டணத்தில் தொகுக்கலாம். இதில் ஓடிடி பிரீமியம் திட்டமும் உள்ளது. இது 300 Mbps திட்டத்துடன் இணைக்கப்படலாம். ஆனால் அந்த திட்டத்திற்கு மாதத்திற்கு ரூ. 166 + GST செலவாகும். இது நிறுவனத்தின் விளம்பரச் சலுகையாகும். இதை எந்த நேரத்திலும் நிறுவனம் திரும்பப் பெறலாம்.
மேலும் படிக்க | இனி சந்தாவும் இல்லை! பிளானும் கிடையாது! ஜியோ வாடிக்கையாளர்கள் "ஷாக்"
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ