நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் சிஎன்ஜி கார்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், நல்ல கார்களை மக்கள் தேடித் தேடி வாங்குகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, கார் தயாரிப்பாளர்களும் தற்போதுள்ள கார்களுக்கு மேலதிகமாக சிஎன்ஜி பதிப்பில் புதிய கார்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். நீங்களும் சிஎன்ஜி கார் வாங்க திட்டமிட்டிருந்தால், கார் வாங்கும் முன், மிக குறைந்த விலையில் நீண்ட மைலேஜ் தரும் நாட்டில் உள்ள மலிவான எலக்ட்ரிக் கார் பற்றி விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டிலேயே மலிவான மற்றும் அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ 800. இந்தக் கார் பட்ஜெட் விலையில் சிஎன்ஜி கார் தேடுபவர்களுக்கு உகந்தாக இருக்கிறது.   


மேலும் படிக்க | பல்சருக்கு No சொல்லுங்க! சுசூகியின் சூப்பர் மாடல் பைக்


மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி விலை


மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி வகையின் ஆரம்ப விலை ரூ. 5,03,000. ஆன்ரோடு விலையில் வரிகள் உட்பட ரூ. 5,55,011 வரை விற்பனை செய்யப்படுகிறது.  நான்கு டிரிம்களுடன் சந்தையில் அறிமுகமாகியிருக்கும் மாருதி ஆல்டோ, LXi மட்டுமே CNG என இரு விருப்பங்களில் உள்ளது.  796 சிசி 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 48 பிஎஸ் பவரையும், 69 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி கிட்டில், இந்த எஞ்சின் 41 பிஎஸ் பவரையும், 60 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.


மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி மைலேஜ்


மாருதி ஆல்டோ 800 பெட்ரோல் வேரியன்ட்டில் 22.05 கிமீ மைலேஜ் தருவதாகவும், சிஎன்ஜி கிட்டில் இந்த மைலேஜ் லிட்டருக்கு 31.59 கிமீ வரை கொடுப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரை முன் இருக்கையில் இரட்டை ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | Hyundai IONIQ6: ஒரு வாரத்தில் அறிமுகமாகிறது ஹூண்டாய் ஸ்போர்ட்ஸ் கார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR