பல்சருக்கு No சொல்லுங்க! சுசூகியின் சூப்பர் மாடல் பைக்

பல்சருக்கெல்லாம் சவால்விடும் சுசூகி நிறுவனத்தின் கிக்சர் எஸ்எப் 250 பைக் பற்றி தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 10, 2022, 12:54 PM IST
  • மாருதி சுசூகியின் புது பைக்
  • இளைஞர்களை கவரும் ஸ்போர்ட்ஸ் பைக்
  • ரூ.2 லட்சம் விலையில் விற்பனை
பல்சருக்கு No சொல்லுங்க! சுசூகியின் சூப்பர் மாடல் பைக் title=

Suzuki Gixxer SF 250: ரைடிங்கில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் வாங்கும் மிகப்பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக் Suzuki Gixxer SF 250 Moto GP. ரைடிங்கில் உங்களுக்கு அசாத்திய த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் இந்த பைக், லுக்கிலும் மாஸ் காட்டும். ஸ்டைலுடன் கூடிய வேகமும் இந்த பைக்கில் இருப்பதால் வேகம் செல்லும் ஆர்வலர்களின் பிரியமான பைக்காக இது இருக்கிறது. Suzuki Gixxer SF 250-ன் ஆரம்ப விலை ரூ. 1,91,200. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை. ஆன்ரோடு விலை அதிகபட்சம் ரூ.2,25,839 வரை விற்பனையாகிறது.

மேலும் படிக்க | K Light 250V: கீவே K-லைட் 250V இந்தியாவில் அறிமுகமானது: 250சிசி குரூஸர்

பலருக்கும் பிடித்தமான பைக்காக இருந்தாலும், விலையின் காரணமாக கனவு பைக்காக இருக்கிறது. இந்த பைக்கை நீங்கள் வாங்க விரும்பினால் அதற்கான பைனான்ஸ் பிளானும் இங்கே இருக்கிறது. ஆன்லைன் டவுன் பேமேண்ட் முறையில் வங்கிகளில் நீங்கள் லோன் வாங்கலாம். இந்த பைக்குகளுக்கு லோன் வேண்டும் என்று வங்கியை நாடினால், உரிய வழிமுறையின் அடிப்படையில் வாகன லோனை பெற்று சுசூகி கிக்சர் எஸ்எப் 250 மோட்டோ ஜிபி பைக்கை வாங்கலாம். முன்பணமாக ரூ.23,000 செலுத்தினால்போதும். எஞ்சிய தொகையை ஒவ்வொரு மாதமும் 6,171 ரூபாய் இஎம்ஐ 3 வருடங்களுக்கு செலுத்த வேண்டும். 

நீங்கள் கடன் வாங்கும் வங்கிகள் ஆண்டுக்கு 9.7 விழுக்காடு வட்டியை வசூலிக்கும். இந்த பைக்கில் 249 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது ஆயில் கூல்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த எஞ்சின் 26.5 பிஎஸ் பவரையும், 22.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கின் பிரேக்கிங் அமைப்பில், நிறுவனம் அதன் முன் மற்றும் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்கை நிறுவியுள்ளது. அதனுடன் டூயல் சேனல் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மைலேஜ் குறித்து, இந்த Suzuki Gixxer SF 250 பைக் 38.5 kmpl மைலேஜ் தருவதாகவும், இந்த மைலேஜ் ARAI-ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளதாகவும் மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க| ஜூன் மாத விற்பனையில் முதல் இடத்தில் வேகன் ஆர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News