OPPO Electric Vehicle: Oppo ஸ்மார்ட்போன்கள், வாடிக்கையாளர்கள் இடையே மிகவும் விரும்பப்படுகின்றன. இப்போது ஓப்போ நிறுவனம் புதிய துறையில் நுழைய தயாராகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓப்போ நிறுவனம், இந்தியாவில், 2023 - 2024 ஆம் ஆண்டுகளில் OPPO EV மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 91mobiles இன் அறிக்கையின்படி, டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் OPPO EV பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.


அவரைப் பொறுத்தவரை, இது குறித்த நிறுவனத்தின் திட்டமிடல் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. அதாவது இது எப்போது அறிமுகம் ஆகும் என்பது இன்னும் நிச்சயமற்றதாக உள்ளது. நிறுவனம் அறிமுகத்தை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போடவும் வாய்ப்புள்ளது.


இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை எவ்வளவு இருக்கும்


OPPO EV மின்சார ஸ்கூட்டரின் (Electric Scooter) விலை பற்றி Tipster கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, ஒப்போ இந்த மின்சார ஸ்கூட்டரின் விலையை 60 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கும். தற்போது, ​​பெரும்பாலான மின்சார ஸ்கூட்டர்களின் விலை சுமார் 1 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த நிலையில், இந்த மின்சார ஸ்கூட்டர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.


OPPO இதற்கான திட்டத்தை தீட்டி வருகிறது 


நிறுவனம் பேட்டரி மற்றும் பிற கூறுகளுக்கான உற்பத்தியாளருடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் டெஸ்லா போன்ற பிராண்டுகளுக்கு பாகங்களையும் வழங்குகின்றன. சமீபத்தில், Oppo 2018 இல் மற்ற BBK எலக்ட்ரானிக்ஸ் துணை நிறுவனங்களான Realme, OnePlus மற்றும் Vivo ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு மின்சார வாகனங்களுக்கான வர்த்தக டிரேட்மார்குகளுக்கு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.


ALSO READ:Electric Car: உங்கள் மின்சார காரின் வரம்பு குறையாமல் இருக்க உதவும் சூப்பர் டிப்ஸ் 


இந்திய மின்சார வாகன (Electric Vehicles) சந்தையில் நுழைய விரும்பும் பல சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்த நிறுவனம் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.


ஓப்போ நிறுவனம் மின்சார காரையும் அறிமுகம் செய்யக்கூடும்


இது தவிர, நிறுவனம் டாடா நானோ போன்ற சிறிய காரின் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. டாடா நானோ குறைந்த விலை காராக அறிமுகம் ஆனது. ஓப்போவும் இந்த காரை மலிவு விலை காராக அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.


ஓப்போ முதன்மையாக மின்சார கார் மற்றும் ஸ்கூட்டர் இரண்டையும் இன்ட்ராசிட்டி பயணத்திற்காக வடிவமைத்து வருவதாகவும் தெரிகிறது.


ALSO READ:Ola S1 vs Ather 450X vs Simple one: உங்களுக்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டர் எது? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR