Reliance Jio vs Airtel: எந்த 1.5ஜிபி தினசரி டேட்டா திட்டம் உங்களுக்கு ஏற்றது?
Reliance Jio vs Airtel: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கும் நான்கு முதல் ஐந்து திட்டங்களைக் கொண்டுள்ளன.
வீட்டு வைஃபை மற்றும் அலுவலக இணையத்தை முதன்மையாக நம்பியிருக்கும் சந்தாதாரர்களுக்கு பொதுவாக 1ஜிபி முதல் 1.5ஜிபி வரை தினசரி டேட்டா திட்டங்கள் தேவைப்படுகின்றன. ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்கள், சராசரி பயனருக்கு இரண்டு வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தல் மற்றும் இசையைக் கேட்பது உள்ளிட்ட அடிப்படைப் பணிகளைச் செய்ய போதுமான டேட்டாவை வழங்குகின்றன.
இவை மலிவான விலையிலும் கிடைக்கின்றன. ஆகையால் இந்த திட்டங்கள் சந்தாதாரர்களிடையே மிகவும் பிரபலமாகவும் உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கும் நான்கு முதல் ஐந்து திட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த பதிவில் இந்த திட்டங்களின் ஒப்பீடுகளைக் காணலாம்.
ரிலையன்ஸ் ஜியோ 1.5ஜிபி தினசரி டேட்டா திட்டங்கள்
குறைந்த விலையில் கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் 1.5ஜிபி/நாள் டேட்டா திட்டங்கள் ரூ.119 இல் தொடங்குகின்றன. ரூ.119 திட்டமானது 14 நாட்களுக்கு 1.5ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை அளிக்கின்றது.
அடுத்த திட்டம் ரூ.199க்கு வருகிறது. இதில் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவை 23 நாட்களுக்கு கிடைக்கின்றன. ஒரு மாத வேலிடிட்டியை எதிர்பார்ப்பவர்கள் ரூ.239க்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் திட்டத்தை தேர்வு செய்யலாம். ரூ.479 மற்றும் ரூ.666 திட்டங்கள் முறையே 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றன. ஜியோ வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ், ரூ.2545 திட்டமானது 336 நாட்களுக்கு அதே பலன்களை வழங்குகிறது.
அனைத்து ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களும் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட ஜியோவின் பயன்பாடுகளுக்கான சந்தாக்களுடன் வருகின்றன.
ஏர்டெல் 1.5ஜிபி தினசரி டேட்டா திட்டங்கள்
ஏர்டெல்லின் 1.5ஜிபி தினசரி டேட்டா திட்டம் ரூ.299ல் தொடங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் 1.5ஜிபி/நாள், 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.
அடுத்த திட்டம் ரூ.479க்கு வருகிறது. இந்த திட்டம் அதே பலன்களை 56 நாட்களுக்கு வழங்குகிறது. காலாண்டு ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ரூ.719-ஐ வாங்கலாம். சுவாரஸ்யமாக, ஏர்டெல் ரூ.666 திட்டத்தில் 70 நாட்களுக்கு பலன்களை வழங்குகிறது.
மேலும் படிக்க | BSNL அசத்தும் ரீசார்ஜ் பிளான்: ஜியோ, ஏர்டெல்லுக்கு பயங்கர போட்டி
அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களும் 30 நாள் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பிற ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்களுக்கான இலவச டிரையலுடன் வருகின்றன. இவற்றில் விங் மியூசிக், ஃப்ரே ஹெலோ டியூன்ஸ், ஃப்ரீ ஆன்லைன் கோர்சுகள், ஃபாஸ்ட் டேகில் ரூ. 100 கேஷ்பேக், அப்பல்லோ 24/7 சர்கிள் ஆப்பில் 3 மாத அணுகள் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ரிலையன்ஸ் ஜியோ விலை மதிப்பின் அடிப்படையில் வெற்றி பெறுகிறது. ஏனெனில் பயனர்கள் 1.5 ஜிபி/நாள் டேட்டா திட்டத்தை வெறும் ரூ. 119-க்கு பெறலாம். மேலும், ஜியோ ஒரு வருடாந்திர திட்டத்தை வழங்குகிறது, இது ஏர்டெல்லில் வழங்கப்படவில்லை. ஏர்டெல்லின் 28 நாள் வேலிடிட்டி திட்டம் ரூ.299ல் தொடங்குகிறது. எனினும், ஜியோ இதை ரூ.239க்கு வழங்குகிறது. அதேபோல், ஜியோ ரூ.666க்கு 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, ஏர்டெல் அதே விலையில் 70 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.
சுவாரஸ்யமாக, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் 1.5 ஜிபி தினசரி திட்டங்களின் கீழ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற கூடுதல் ஸ்ட்ரீமிங் நன்மைகளை வழங்காது. ஸ்ட்ரீமிங் சேவையின் அடிப்படையில் ஜியோ வெற்றி பெறுகிறது. ஏனெனில் இது ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமாவுக்கான அணுகலை வழங்குகிறது. இது சந்தாதாரர்களுக்கு நேர்த்தியான பொழுதுபோக்கு விருப்பத்தை வழங்குகிறது.