சரிகிறதா சாம்ராஜ்ஜியம்? ஜியோவை கைவிட்ட 1.29 மில்லியன் வாடிக்கையாளர்கள் - ஏன்?

ஒரு மாதத்தில் ஜியோ நெட்வொர்க்கில் இருந்து 1.29 மில்லியன் வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:39 PM IST
  • ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் நெட்வொர்குகளுக்கு அதிர்ச்சி
  • பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் வாடிக்கையாளர்கள்
  • விலையேற்றத்தால் தனியார் நெட்வொர்களுக்கு ஆபத்து
சரிகிறதா சாம்ராஜ்ஜியம்? ஜியோவை கைவிட்ட 1.29 மில்லியன் வாடிக்கையாளர்கள் - ஏன்? title=

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகியவை ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை கடந்த ஆண்டு உயர்த்தின. இதனால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்.என்.எல் திட்டங்களை உபயோகிக்க தொடங்கியுள்ளனர். ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களை விட ஜியோவின் விலை சற்று குறைவாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் இழப்பை ஜியோ அதிகம் எதிர்கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். வோடாஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு 1.6 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. கடந்த ஓராண்டில் ஒருகோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் வெளியேறியபோதும் சந்தை மதிப்பில் ஜியோ 36 விழுக்காடு பங்குடன் முதல் இடத்தில் உள்ளது. 30.81 விழுக்காடுடன் இரண்டாம் இடத்தில் ஏர்டெல்லும், 3வது இடத்தில் வோடோஃபோன் ஐடியா நிறுவனங்களும் இருக்கின்றன. 

இதேபோல், வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2021 டிசம்பரில் டிராயின் அறிக்கையின்படி, டிசம்பரில் நாட்டில் செயலில் உள்ள வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,154.62 மில்லியனாக அதாவது 115.463 கோடியாக இருந்தது. நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.10 சதவீதம் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாக்கள் ஒரு மாதத்தில் 638.46 மில்லியனிலிருந்து 633.34 மில்லியனாகவும், கிராமப்புறங்களில் 529.04 மில்லியனிலிருந்து 521.28 மில்லியனாகவும் குறைந்துள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அனைத்து பகுதிகளிலும் இல்லாமல் இருப்பது, அந்த நிறுவனத்துக்கு பின்னடைவாக உள்ளது. 

மேலும் படிக்க | JIO-AIRTEL-VI சூப்பர் திட்டம்; குறைந்த விலையில் அதிக நன்மைகளைப் பெறலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News