Cheapest Smartphones: ரூ. 10,000-க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்
அசத்தலான அம்சங்களுடன் உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் போன்களும் உள்ளன. அவற்றில் 5,000mAh பேட்டரி போன்ற அற்புதமான அம்சங்களும் கிடைக்கும்.
இன்றைய காலத்தில் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்குவது என்றால் அதிக பணம் செலவழிக்க வேண்டும். ஆனால், அசத்தலான அம்சங்களுடன் உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் போன்களும் உள்ளன. அவற்றில் 5,000mAh பேட்டரி போன்ற அற்புதமான அம்சங்களும் கிடைக்கும். மேலும், இந்த ஸ்மார்ட்போன்களை 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே காணலாம்.
1. Realme Narzo 50i
இந்த ரியல்மி (Realme) ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் கொண்டது. இதை ரூ .7,499 க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ .7,999 ஆகும். மேலும், பரிவர்த்தனை சலுகையின் மூலம் இந்த டீலில் நீங்கள் ரூ .6,950 வரை நன்மைகளையும் பெறலாம்.
2. Redmi 9i Sport
இந்த ரெட்மி (Redmi ) ஸ்மார்ட்போனை HD + டிஸ்பிளே மற்றும் 5,000mAh பேட்டரியுடன் 9,999 ரூபாய்க்கு பதிலாக 8,799 ரூபாய்க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில், நீங்கள் ரூ .8,250 வரையிலான தொகையில், உங்கள் பஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.
ALSO READ: Amazon அதிரடி: வெறும் ரூ. 700-க்கு OPPO லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், முந்துங்கள்!!
3. Realme C11
2021 இல் அறிமுகம் ஆன இந்த ஸ்மார்ட்போனில், 5MP முன்பக்க கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற பல அம்சங்களைப் பெறுவீர்கள். இந்த போனை நீங்கள் ரூ .8,799 க்கு வாங்கலாம். அதன் அசல் விலை ரூ .9,999 ஆகும். பழைய போனுக்கு பதிலாக இந்த போனை வாங்கினால், ரூ .8,250-க்கு வாங்கலாம்.
4. Poco M2 Reloaded
512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ 11,999 ஆகும். ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த போகோ (Poco) போனை ரூ .9,999 க்கு பிளிப்கார்ட்டில் வாங்கலாம். மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தினால், இதை ரூ .9,450-க்கு வாங்கலாம்.
5. Realme C21Y
ரூ .10,999 விலை உள்ள இந்த ஸ்மார்ட்போனை Flipkart இல் ரூ .9,999 க்கு வாங்கலாம். இந்த போனில் நீங்கள் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற பல அம்சங்களைப் பெறுவீர்கள். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் இதை வாங்கினால், ரூ. 9,450-க்கு இந்த போனை வாங்கலாம்.
ALSO READ: அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR