ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் டிவி நியோ 32 இன்ச் ஹெச்.டி. டிவி மாடலை அறிமுகம் செய்தது. இதில் பெசல் லெஸ் டிசைன், குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின், விவிட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் ஆண்ட்ராய்டு டிவி 9 மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு செயலிகள் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கிறது.
இத்தகைய அசத்தலான ரியல்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச்-ன் அம்சங்கள்
- 32 இன்ச் 1366×768 பிக்சல் ஹெச்டி டிஸ்ப்ளே
- 7 டிஸ்ப்ளே மோட்கள்
- குவாட்கோர் கார்டெக்ஸ் A53 மீடியாடெக் பிராசஸர்
- மாலி-470 MP3 ஜிபியு
- 1 GB ரேம்
- 8 GB மெமரி
- ஆண்ட்ராய்டு டிவி 9
- பில்ட்-இன் குரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ
- வைபை, ப்ளூடூத் 5
- 2 x ஹெச்.டி.எம்.ஐ., 1 x USB., A.V., ஈத்தர்நெட்
- 20 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ
ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32 இன்ச் மாடல் விலை ரூ. 14,999 ஆகும். இது ஃப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் அக்டோபர் 3-ம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ மொபைல் சந்தையை கலக்க வருகிறது Oppo-வின் புதிய போன்: நிமிடங்களில் full charge
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR