சீனா ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலின் முன்ணனியில் உள்ளது
இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலில் சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இடம்பிடித்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில மட்டும், 3.9 கோடி ஸ்மார்ட்போன்கள் 2017 - ம் காலாண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதோபோல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 21 சதவிகித வளர்ச்சி என சர்வதேச டேட்டா கார்பரேஷன் (IDC) வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலாண்டில் இத்தனை ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது இதுவே முதல் முறையாகும். இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 40 சதவிகிதம் வளர்ச்சி ஆகும்.
சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்திய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மட்டும் 10 சதவிகிதம் ஆகும். சியோமி நிறுவனம் இந்த காலாண்டில் மட்டும் 92 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், சாம்சங் நிறுவனத்திற்கு இணையாக சியோமி நிறுவனமும் 23.5 சதவிகித பங்குகளை பெற்றுள்ளதாக IDC தெரிவித்துள்ளது.
சீனா ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலின் முன்ணனியில் உள்ளது