ஐக்கிய நாடுகளின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) ஆதார் தரவுகளை இரகசியமாக சேகரிக்க குறிப்பிட்ட கருவிகளைப் பயன்படுத்துவதாகக் வெள்ளியன்று விக்கிலீக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்கிலீக்ஸ் கூறியுள்ளதாவது, சிஐஏ எக்ஸ்பிரஸ்லேன் கருவியை பயன்படுத்தி ஆவன விவரங்களை சேகரிப்பதாக கூறியுள்ளது. "ExpressLane" என்பது இரகசிய தகவல் சேகரிப்பு கருவியாகும், இது சிஐஏ மூலம் இரகசியமாக தரவுகளை சேகரிப்பது போன்ற சேவைகளில் இருந்து இணைப்புகளை வழங்குவதற்கு பயன்படுத்துகிறது," எனவும் தெரிவித்துள்ளது.


பயோமெட்ரிக் மென்பொருளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமெரிக்க நிறுவனமான கிராஸ் மவுண்ட் டெக்னாலஜிஸ், ஆதார் திட்டத்திற்காக UIDAI சான்றளிக்கப்பட்ட பயோமெட்ரிக் சாதனங்களை வழங்க ஒப்பந்தம் செயபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 



 


மற்றொரு ட்விட்-யில் விக்கிலீக்ஸ் கூறியுள்ளதாவது, "UIDAI, இதுவரை இந்த நிறுவனங்கள், அவர்களின் வணிக, தொழில்முறை மற்றும் தனிப்பட்ட சங்கங்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளில் எந்தவொரு பின்னணி சோதனை செய்யவில்லை." என தெரிவித்துள்ளது. மேலும் "CIA முகவர்களால் ஆதார் தரவுகளை நிகழ்நேரத்தில் அணுக முடியும்." எனவும் தெரிவித்துள்ளது.