மைக்ரோசாப்ட் நிறுவனமானது இம்முறை வின்டோஸ் 11 பில்ட் 22572 உடன் இரண்டு புதிய செயலிகளை வழங்கவிருக்கிறது. புதிதாக பேமிலி ஆப்ஸ் மற்றும் கிளிப்சாம்ப் ஆப்ஸ் இனி வின்டோஸ் 11 பில்ட் 22572 உடன் கிடைக்கவிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேமிலி ஆப்ஸ் என்பது உங்கள் மைக்ரோசாப்ட் கணக்கிற்கான "குடும்ப அமைப்புகளை" நிர்வகிக்க உங்களை அனுமதிக்கும் ஒரு பயன்பாடாக செயல்படும். உங்களுடைய மைக்ரோசாப்ட் கணக்கில் உங்கள் குடும்பத்தினரை நீங்கள் இணைத்திருந்தால், அவர்களின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.



இதன் மூலம் குழந்தைகளுக்கான திரை நேரத்தை நிர்வகிக்கலாம். மேலும், நிகழ்நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் இருப்பிடங்களை கண்டறியலாம். இந்த ஆப்ஸ் வின்டோஸ் 11 ஹோம் பதிப்புகளுடன் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே Pro பயனர்கள் கூடுதல் செயலிகளை இணைப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை.


கிளிப்சாம்ப் ஆப்ஸ் என்பது மைக்ரோசாப்ட் கடந்த ஆண்டு வாங்கிய வீடியோ எடிட்டிங் கருவியாகும். வின்டோஸ் 11 வெளியானபோது, கிளிப்சாம்ப் ஐகான் புதிய நிறுவல்களுடன் சேர்க்கப்பட்டது, மேலும் கிளிப்சாம்ப் ஒரு இணைய அடிப்படையிலான வீடியோ எடிட்டராக இருப்பதால், அது வெப்-ஆப்ஸ்ஸாக நிறுவப்படும். இதனால் அதைப் பதிவிறக்கி நிறுவுவதற்கு காத்திருக்க வேண்டியதில்லை. 


மேலும் படிக்க | 'ஸ்ரீவள்ளி' பாடலால் ட்ரெண்டாகிய விமான பணிப்பெண்!



வீடியோ எடிட்டிங்கிற்காக தனியாக ஆப்ஸ்களை பயன்படுத்தாமல், இலவசமாக வீடியோ எடிட் செய்வதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது வீடியோ எடிட்டர் மென்பொருளான ‘கிளிம்சாம்ப்’-ஐ விண்டோஸ் 11 ஓஎஸ்ஸுடன் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. பழைய விண்டோஸ் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் ஸ்டோருக்கு சென்று கிளிப்சேம்பை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், இந்த மென்பொருளுடன் ஏராளமான ராயல்டி இல்லாத வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதில் அஜூர் நிறுவனத்தின் துணைக்கொண்டு உருவாக்கப்பட்ட "டெக்ஸ்ட் டூ ஸ்பீச்" ஜெனரேட்டரும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் வாய்ஸ் ஓவர்கள் உருவாக்க முடியும் எனவும் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது வரும் வாரத்தின் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. இந்த புதிய அம்சமானது "சர்ச் ஹைலைட்ஸ்" என்பதில் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் உள்நுழைந்திருந்தால், உங்கள் நிறுவனத்தில் உள்ள நபர்கள் மற்றும் ஃபைல்கள் போன்றவை காண்பிக்கும். இந்த அனுபவம் விண்டோஸ் 10க்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வின்டோஸ் 11 பில்ட் 22572ல் இன்னும் சில மேம்பாடுகள் செய்யப்படவுள்ளது. டார்க் தீம், டு நாட் டிஸ்டர்ப், குவிக் இசிஸ் ஆப்ஸ், வின்டோஸ் சான்டு பாக்ஸ் போன்றவையும் இதனுடன் இணைந்து வழங்கப்பட விருக்கிறது.


மேலும் படிக்க | தாய் யானையிடம் பால் குடித்த 3 வயது சிறுமி- வீடியோ வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR