எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு  27ம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் (ma Subramaniam) தெரிவித்தார்.  மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை விநியோகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். இதில், மாணவர்களிடம் இருந்து இதுவரை மொத்தமாக 25,593 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள, இதில் 24,949 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பாக பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு


இந்தாண்டு விண்ணப்பித்த மாணவர்களில் 16,029 பேர் மாநில பாடத்தின் கீழ் பயின்றவர்கள் உள்ளனர்.   மேலும், 8,453 மாணவர்கள் சிபிஎஸ்சியில் இருந்தும், 299 மாணவர்கள் ISCE- யில் (INDIAN SCHOOL CERTIFICATE EXAMINATION) இருந்து  விண்ணப்பித்துள்ளனர்.


சிறப்பு பிரிவினர் 


வரும் 27ம் தேதி முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் 5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 76 விண்ணங்கள் பெறப்பட்டுள்ளது.  விளையாட்டு வீரர்களுக்கு 156 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.( எம்பிபிஎஸ் - 7, பிடிஎஸ் - 1). முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள் 360 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ் 10, பல் மருத்துவ இடம் 1 ஒதுக்கப்படும். 



7.5சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான விவரம் 


அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு 534 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 437 எம்பிபிஎஸ், 97 பல் மருத்துவ இடங்கள் அடங்கும். 


நீட் முதலிடம் - சிவா - 514 - புதுக்கோட்டை 


இரண்டாமிடம் - பிரகாஷ்ராஜ் - 512 - திருவண்ணாமலை 


மூன்றாம் இடம் - சந்தானம் - 483 - தர்மபுரி 


4ம் இடம் - வெங்கடேஷ்வரி - 476 - சேலம் 


5ம் இடம் - குமார் - 476 - தருமபுரி


இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,175 இடங்களும், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளுக்கு 200 இடங்களும் உள்ளன. மாநில ஒதுக்கீட்டிற்கு 4,319 எம்பிபிஎஸ் இடங்களும், 170 பல் மருத்துவ இடங்களும் உள்ளன.  இந்த இடங்களில் 324 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 13 பல் மருத்துவ இடங்கள் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.   18 தனியார் கல்லூரிகளில் 2,650 எம்பிபிஎஸ் இடங்களும், 18 பல் மருத்துவ கல்லூரிகளில் 1,760 இடங்களும் அரசு ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த இடங்களில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு 113 எம்பிபிஎஸ் இடங்களும், 84 பல் மருத்துவ இடங்களும் சுயநிதி கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு முடிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR