புதுடெல்லி: கொரோனா தொற்று நிலைமை  (COVID-19 pandemic) பார்த்தால் தற்போது அது நம்மை விட்டு நீங்காது, அதாவது அனைவரிடமிருந்தும் ‘பாதுகாப்பான தூரத்தை’ பராமரிப்பது எல்லோருக்கும் முக்கியம். இன்றைய நிலவரப்படி கொரோனா இயல்பானது என நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது பெரும் சவாலானது. வெளியில் எங்கு சென்றாலும், பாதுகாப்பதாக இருப்பது மிக முக்கியமாகும். அதுவும் வெளியில் ஏதாவது ஒரு பொருளை தொடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதில் குறிப்பாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே தான் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்க இந்திய வங்கிகள் உங்களுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையும் படியுங்கள் - ATM மோசடியை எவ்வாறு தவிர்க்கலாம், சிறப்பு சேவையைத் தொடங்கிய SBI


அதாவது முன்மாதிரி "தொடர்பு இல்லாத" (prototype contactless) ஏடிஎம் கியோஸ்க் நடமுறைக்கு வர உள்ளது. இது நமக்கு தேவையான பணத்தை (currency) திரும்பப் பெறும்போது கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளும் என்ற அச்சத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது. வழக்கமாக, ஏடிஎம் இயந்திரங்களில்  இருந்து பணத்தை எடுக்கும் போது, ​​டூர்க்நொப்பில் தொடங்கி, பொத்தான்கள் மற்றும் தொடுதிரை வரை, பணத்தை திரும்ப பெற ஒருவர் பல்வேறு மேற்பரப்புகளைத் தொட வேண்டியுள்ளது. 


இதையும் படியுங்கள் - நற்செய்தி.... இனி உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ATM-ல் பணம் எடுக்கலாம்!!


புதிய முறையான ஏடிஎம் கியோஸ்க் (ATM kiosk plans) அதை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு "தொடர்பு இல்லாத"  மாதிரிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. ஏடிஎம் நிலையங்களுக்குள் நுழைந்து வெளியேறும் போது பின்பற்ற வேண்டிய சுத்திகரிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பணத்தை எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். 


இதையும் படியுங்கள் - ATM செல்ல தேவையில்லை; இனி வீட்டில் இருந்தபடியே பணம் பெறலாம்... எப்படி?


மும்பையைச் சேர்ந்த ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் (AGS Transact Technologies) நிறுவனம், பணம் செலுத்தும் போதோ அல்லது எடுக்கும் போதோ ஏடிஎம்களுக்கான முன்மாதிரி மென்பொருளைக் கொண்டு வந்துள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் “மேற்பரப்பைத் தொடாமல்” திரையில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணத்தை திரும்பப் பெற முடியும்.


வங்கிகள் இந்த மென்பொருளை அந்தந்த ஏடிஎம் இயந்திரங்களில் (ATM Machines) மட்டுமே பதிவேற்ற வேண்டும் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்கில் மென்பொருள் அம்சத்தை இயக்க வேண்டும்.