வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவைப் பெறும் Maruti Brezza - Grand Vitara!
மாருதி சுஸுகி கார் முன்பதிவு: மாருதி சுஸுகியின் இரண்டு வாகனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக வரவேற்பைப் பெறுகின்றன.
Maruti Brezza and Grand Vitara: இந்தியாவில் எஸ்யூவிகளுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாருதி சுஸுகி தனது தயாரிப்புகளை கொண்டு வந்துள்ளது. நிறுவனம் முதலில் அதன் சப்-காம்பாக்ட் SUV பிரெஸ்ஸாவை புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தியது. இதற்குப் பிறகு, நிறுவனம் க்ரெட்டா-செல்டோஸ்க்கு போட்டியாக மாருதி கிராண்ட் விட்டாராவையும் கொண்டு வந்தது. இந்த நிறுவனத்தின் இந்த இரண்டு வாகனங்களும் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில், மாருதி சுசூகியின் இரண்டு எஸ்யூவிகளும் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றுள்ளன என கூறப்பட்டுள்ளது. இதில், புதிய பிரெஸ்ஸாவுக்கு மட்டும் 75 ஆயிரம் முன்பதிவுகள் கிடைத்துள்ள நிலையில், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிராண்ட் விட்டாராவுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க | Ferrari 296 GT3: ஃபெராரி ரேஸ் காரின் சூப்பர் தோற்றம்: விலை என்ன?
ET ஆட்டோவிடம் பேசிய மாருதி சுஸுகியின் மூத்த நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, நிறுவனம் அதன் இரண்டு புதிய SUV களுக்கும் அமோக வரவேற்பை பெற்று வருவதாக கூறினார். மாருதி கிராண்ட் விட்டாராவின் முன்பதிவுகளில் பாதிக்கும் மேற்பட்டவை சக்திவாய்ந்த ஹைப்ரிட் தொழில்நுட்ப மாறுபாட்டிற்கானவை.
புதிய பிரெஸ்ஸாவின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம். அதே நேரத்தில், அதன் டாப் வேரியண்டின் விலை ரூ.13.80 லட்சம் வரை செல்கிறது. இது மொத்தம் 7 வகைகளில் கிடைக்கிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
மாருதி கிராண்ட் விட்டாரா சுஸுகியின் குளோபல்-சி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. நடுத்தர அளவிலான SUV ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் K15C DualJet பெட்ரோல் எஞ்சின் மற்றும் நுண்ணறிவு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.
மேலும் படிக்க | Long Drive Scooter: நீண்ட தூர பயணத்தை நிஜமாக்கும் சூப்பர் ஸ்கூட்டர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ