Long Drive Scooter: நீண்ட தூர பயணத்தை நிஜமாக்கும் சூப்பர் ஸ்கூட்டர்

தொலைதூர பயணத்தை நிஜமாக்கும் சூப்பர் ஸ்கூட்டரைப் பற்றி தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 27, 2022, 04:19 PM IST
  • நீண்ட தூரம் சொல்லும் எலக்டிரிக் ஸ்கூட்டர்
  • மிக குறைந்த விலையில் இருக்கும் சூப்பர் ஸ்கூட்டர்
Long Drive Scooter: நீண்ட தூர பயணத்தை நிஜமாக்கும் சூப்பர் ஸ்கூட்டர் title=

இந்தியாவின் இரு சக்கர வாகனத் துறையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது. மிக விரைவில் இந்த வளர்ச்சி பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம் என்னவென்றால், குறைந்த விலை மற்றும் நீண்ட தூரம் மற்றும் உயர் தொழில்நுட்ப அம்சங்கள் மாசு ஏற்படாமல் இருப்பதுதான்.

மேலும் படிக்க | Realme Pad X: வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்கு புதிய 5ஜி டேப்லெட் அறிமுகம்

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வரம்பில், இன்று நாம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான AMO எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனத்தின்  எலக்ட்ரிக் ஸ்கூட்டர் AMO Jaunty Plus பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறோம். ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் அதன் குறைந்த விலையில் உள்ளிட்ட அம்சங்களுக்காக விரும்பப்படுகிறது. நீங்களும் மலிவு விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால், இந்த ஜான்டி பிளஸ் விலை மற்றும் அம்சங்களைப் பற்றிய முழு விவரங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஸ்கூட்டரில் 60V, 40Ah திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பேக் இடம்பெற்றிருக்கும். இந்த பேட்டரி பேக்குடன், 1.265 kW பவர் மோட்டாரும் வாகனத்தில் இடம்பெறும். சாதாரண சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால், இந்த பேட்டரி பேக் 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என நிறுவனம் கூறுகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 120 கிமீ தூரம் வரை செல்லும். வேகத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகம் கிடைக்கும்.

ஸ்கூட்டரின் பிரேக்கிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரையில், முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தியுள்ளது. இதனுடன், அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, சார்ஜிங் பாயிண்ட், டிஆர்எல்ஸ், ஃபாஸ்ட் சார்ஜிங், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் ட்ரிப் மீட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆன்டி தெஃப்ட் அலாரம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீட் கண்ட்ரோல் ஸ்விட்ச், இபிஎஸ், இன்ஜின் கில் ஸ்விட்ச் ஆகியவையும் வாகனத்தில் இடம்பெற்றிருக்கும். ஜான்டி பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.74,460 என்ற ஆரம்ப விலையில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இஎம்ஐ மூலம் Toyota Fortuner- ஐ சொந்தமாக்குங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News