நேற்று, புதன்கிழமை (ஜூலை 31) ஒரு தொழில்நுட்ப நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் கிட்டத்தட்ட 300 இந்திய உள்ளூர் வங்கிகளில் சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள சிறிய வங்கிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் நிறுவனமான சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் (C-Edge Technologies) மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சி-எட்ஜ் டெக்னாலஜிஸ்


பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India (SBI)) மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services (TCS)) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட நிறுவனம் சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் ஆகும். ஜூலை 31 சைபர் தாக்குதலால், வங்கியின் பயனர்கள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை. அதோடு, யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகளைப் பயன்படுத்த முடியவில்லை.


வங்கி சேவைகள் பாதிப்பு
இந்த செயலிழப்பு, சி-எட்ஜை சார்ந்திருக்கும் கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களை மிகவும் பாதித்தது. சி-எட்ஜ் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில்லறை கட்டண முறைகளை அணுகுவதை தற்காலிகமாக துண்டிக்க வேண்டும் என்று UPI ஐ நிர்வகிக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), அறிவுறுத்தியது.


"சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அவர்களின் சில அமைப்புகளை பாதிக்கும் ransomware தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்று NPCI தெரிவித்துள்ளது. இந்தப் பாதிப்பை சரிசெய்ய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | சிக்கலில் மைக்ரோசாஃப்ட்... விமான சேவை முதல் வங்கிகள் வரை... அனைத்தும் முடங்கும் அபாயம்..!!


அநேகமாக இன்று (வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) காலைக்குள் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. இந்த சைபர் தாக்குதலைத் தொடர்ந்து மூன்றாம் தரப்பு தணிக்கையும் நடத்தப்பட்டது. "சி-எட்ஜ் மூலம் சேவை செய்யும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் கட்டண முறைகளை அணுக முடியாது" என்று NPCI கூறியது.


"பாதிக்கப்பட்ட சேவைகளில் பெரும்பாலானவை சிறிய வங்கிகள் என்பதால், நாட்டின் கட்டண முறை அளவுகளில் சுமார் 0.5 சதவிகிதம் மட்டுமே பாதிக்கப்படும்" என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் கூறுகிறது. இந்திய தேசிய கூட்டுறவு சங்கத் தலைவர் திலீப் சங்கனி கருத்துப்படி, குஜராத்தில் உள்ள 17 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உட்பட 300 வங்கிகள் கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன.


ஆர்டிஜிஎஸ் மற்றும் யுபிஐ பணம் செலுத்துதல் போன்ற அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அனுப்புநரின் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் ஆனால் பெறுநரின் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை தெரியவந்துள்ளதாக இந்திய தேசிய கூட்டுறவு சங்கத் தலைவர் திலீப் சன்கனி தெரிவித்தார்.  


மேலும் படிக்க | மீண்டும் முடங்கியது மைக்ரோசாஃப்ட் சேவைகள்! ஐரோப்பாவை பாதித்த Outage 2.0!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ