அரசின் எச்சரிக்கை.... ‘இந்த’ செயலி உங்க போனில் இருந்தா உடனே நீக்கிடுங்க..!!
ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணைய வசதிகளின் காரணமாக கடன் வசதி எளிதாக கிடைத்தாலும், இதன் மூலம் சில பிரச்சனைகள் அதிகரித்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது.
இன்று உலகத்தையே இணையதளம் தான் ஆள்கிறது எனலாம். ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களைப் பார்ப்பதும் அரிது. முன்பெல்லாம் அவசரத் தேவைக்கு பணம் தேவை என்றால், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் கடன் கேட்கும் பழக்கம் இருந்தது. சில சமயங்களில் வெளியில், வட்டிக்கு கடன் வாங்குவோம். ஆனால், ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் இன்றைய கால கட்டத்தில், ஆன்லைனிலேயே கடன் பெறும் வசதி வந்து விட்டது. ப்ளே ஸ்டோரில் சென்று தேடிப் பார்த்தால், எண்ணற்ற கடன் வழங்கும் எண்ணற்ற செயலிகளைப் பார்க்கலாம்.
ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணைய வசதிகளின் காரணமாக கடன் வசதி எளிதாக கிடைத்தாலும், இதன் மூலம் சில பிரச்சனைகள் அதிகரித்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில், கடன் வழங்கும் மொபைல் செயலியில் தொடர்பாக கவனமாக இருக்குமாறு இந்திய அரசு நிறுவனம் ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மொபைல் செயலியின் பெயர் CashExpand-U Finance Assistant - Loan என்னும் செயலில். இது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. இந்த செயலி உங்கள் மொபைலில் இருந்தால், உடனடியாக விழிப்புடன் அதனை அகற்றி விடுங்கள்.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் தோஸ்த் (Cyber Dost) என்னும் நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சமீபகாலமாக, இணைய மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. சைபர் மோசடியில் ஈடுப்படுப்வர்கள் மக்களை ஏமாற்ற பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே, நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சைபர் தோஸ்த் X சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள தகவலில், ‘CashExpand-U Finance Assistant என்னும் கட்ன் செயலி குறித்து கவனமாக இருங்கள். இது வெளிநாட்டில் இருந்து செயல்படும் இந்நாட்டின் எதிரிகளுடன் தொடர்புடைய செயலியில் இருக்கலாம்’ என குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த செயலி குறித்து அரசு எந்த சிறப்பு எச்சரிக்கையும் வெளியிடவில்லை.
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து குறிப்பிட்ட இந்த செயலி அகற்றப்பட்டது. முன்னதால், இதனை சுமார் 1 லட்சம் முறை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், இந்த செயலி 4.4 என்ற மதிப்பீட்டை பெற்றிருந்தது. 7.19 ஆயிரம் பேர் இதற்கு நல்ல ரேட்டிங் மதிப்பை வழங்கியுள்ளனர்.
உங்கள் ஸ்மார்போனில், இந்த கடன் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால், அதனை உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்க, முதலில் செட்டிங்-கிற்கு செல்லவும். அங்குள்ள ஆப் என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின்னர், நீக்க வேண்டிய செயலியை தேர்ந்தெடுக்க, கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு Uninstall என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின்னர், உங்கள் ஸ்மார்போனில் இருந்து செயலி நீக்கப்படும். பொதுவாகவே, உங்கள் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே உள்ள செயலிகளை எப்போதும் மதிப்பாய்வு செய்வது மற்றும் தேவையற்ற செயலிகளை அகற்றுவது முக்கியம். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் சைபர் மோசடிக்கு ஆளாகாமல் உங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ