4G ரிசார்ஜ் பிளான்களில் BSNL தான் பெஸ்ட்! புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்!

BSNL Recharge Plans : கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், மலிவான 4G ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் மிகக் குறைவானதாக இருக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 7, 2024, 11:01 AM IST
  • பிஎஸ்என்எல் 4ஜி அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்கள்
  • பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
  • மலிவான 4G ரீசார்ஜ் திட்டங்கள்
4G ரிசார்ஜ் பிளான்களில் BSNL தான் பெஸ்ட்! புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்! title=

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம், பிற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவில் இயங்கி வருகிறது. அத்லும் தற்போது, பல புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி, போட்டி நிறுவனங்களுக்கு போட்டியை கடினமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள், 4G இணையத்தை அடிப்படையாகக் கொண்டவை.

கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், மலிவான 4G ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் மிகக் குறைவானதாக இருக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருப்பதால், மக்களின் கவனம் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியிருக்கிறது.

பிஎஸ்என்எல் 4ஜி அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்கள்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Airtel, Jio, Vi ஆகியவற்றின் விலைகளைவிட, பிஎஸ்என்எல் திட்டங்களின் பிளானின் விலை குறைவாக உள்ளது. அடுத்த மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க உள்ளள பிஎஸ்என்எல் 4ஜி அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்கள் இவை.

தனது X வலைதள பக்கதில் இருந்து புதிய 4G ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ள பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், தனது வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் குரல் அழைப்பு, 4G இன்டர்நெட் டேட்டா உள்ளிட்ட பல மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளின் பலனைப் பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்

இது தொடர்பாக ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள நிறுவனம், இந்த வீடியோவில் உள்நாட்டு 4G நெட்வொர்க் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இதில் இந்தியா முழுவதும் 4G ஐ அறிமுகப்படுத்துவதற்கான தயாரிப்புகளை நிறுவனம் முடித்திருப்பதைக் காட்டுகிறது.

ரீசார்ஜ் திட்டங்களில், பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, பொழுதுபோக்கு, கேமிங், மியூசிக் உள்ளிட்ட பல மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளின் பலன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் அல்டிமேட் ப்ரீபெய்ட் திட்டம்
PV2399: 2,399 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 395 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தில், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறுவார்கள். இதன் மூலம் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கும்.

PV1999: ரூ.1,999 ரீசார்ஜ் திட்டத்தில், 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், மொத்தமாக 600ஜிபி டேட்டாவின் பலன்கள் வழங்கப்படுகிறது. தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் கட்டணமே இல்லாமல் எவ்வளவு நேரம், எத்தனை அழைப்புகள் வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என்ற வசதியும் உள்ளது.  

மேலும் படிக்க | ஹைபிரிட்? இல்லை மின்சாரக் கார்! உங்களுக்கு ஏற்ற கார் எது? அலசி ஆராயும் சிறப்பு கட்டுரை!

PV997 : பிஎஸ்என்எல்லின் பிவி997 ரீசார்ஜ் திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், பயனர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் தொலைபேசி அழைப்பு, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் வழங்கப்படுகின்றன.

STV599 : மலிவான ரீசார்ஜ் திட்டமான 599 ரூபாய் திட்டத்தில், பயனர்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், மொத்தம் 252 ஜிபி டேட்டா கிடைக்கும்.

STV347 : BSNL இன் 54 நாள் ரீசார்ஜ் திட்டத்தில், தினசரி 2GB டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் போன் அழைப்புகள் கொண்ட இந்த மலிவான ரீசார்ஜ் திட்டத்தில், 108 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பயன்படுத்தலாம்

PV199 :  பிஎஸ்என்எல் நிறுவனத்தின 30 நாட்கள் செல்லுபடியாகும்ரீசார்ஜ் திட்டத்தில், தினசரி 2 ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் குரல் அழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்

PV153 : பிஎஸ்என்எல்லின் PV153 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 26 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 26ஜிபி டேட்டாவின் பலன் கிடைக்கும், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புக்கான வசதி கிடைக்கும்.  

STV118 : இந்த திட்டத்தில் 20 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 10ஜிபி டேட்டாவுடன் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் குரல் அழைப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க | மின்சார பில் கையைக் கடிக்கிறதா? கவலையை போக்கி பர்ஸை பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News