போலி செய்திகளைக் கட்டுப்படுத்த சமூக ஊடகக் கணக்குகளை ஆதார் உடன் இணைக்குமாறு கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், 20 சதவீத சமூக ஊடக போலி ஊடக கணக்குகளை கண்டறிய 80 சதவீத உண்மையான பயனர்கள் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப முடியாது என்றும் தனது உத்தரவில் டெல்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


சமூக ஊடக போலி கணக்குகளை களையெடுப்பதற்கும், கட்டுப்படுத்தப்படுவதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மையத்திற்கு அறிவுறுத்தல் கோரி அக்டோபர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மனுவில் சமூக ஊடக கணக்குகளை ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை அல்லது வேறு எந்த அடையாள ஆதாரங்களுடனும் இணைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. போலியாக பரவும் கட்டண செய்திகளை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.


வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில், வாக்கெடுப்புக்கு முந்தைய 48 மணி நேரத்தில் 'கட்டணச் செய்திகள்' மற்றும் அரசியல் விளம்பரங்களை வெளியிடுவது மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம், 1951 பிரிவு 123(4)-இன் கீழ் ஒரு "ஊழல் நடைமுறை" என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


"போலிச் செய்திகளை வெளியிடுவது, கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துதல், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை குறைவாகப் புகாரளித்தல் மற்றும் பிற வகையான முறைகேடுகளில் ஈடுபடுவது ஆகியவை இந்த குற்றச்சாட்டில் அடங்கும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும கறுப்புப் பணத்தின் செல்வாக்கு மக்களிடையே சமநிலையற்ற தேர்தலை ஏற்படுத்தும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.


"ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டளையான சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு, போலி செய்திகளின் நிகழ்வுகளைத் தணிக்காமல் அடைய முடியாது" என்றும் இந்த மனுவல் அஸ்வினி குறிப்பிட்டிருந்தார். மேலும் "இந்த போலி சமூக ஊடக கணக்குகள் அரசியலமைப்பு அதிகாரிகள் மற்றும் பிரபலங்களில் உண்மையான புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றன" என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


உபாத்யாய், தனது வேண்டுகோளின் மூலம் போலி சமூக ஊடக கணக்குகளை செயலிழக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசின் அதிகாரத்தினை நாடிய நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளார். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.