தீபாவளி 2023: பண்டிகையின்போது UPI QR மோசடியில் ஆன்லைனில் பணத்தை இழந்துவிட்டீர்களா?
தீபாவளி பண்டிகையின்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் மோசடியில் சிக்கிவிட்டீர்களா? அப்படி சிக்காமல் இருக்க விழிப்புடன் இருப்பது அவசியம்.
தீபாவளி விற்பனை நாடு முழுவதும் களைகட்டியிருக்கும் நிலையில் மக்கள், நிதி பரிவர்த்தனையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் யுபிஐ மற்றும் QR கோட் மூலம் பணத்தை எளிமையாக பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) அறிக்கையின்படி, யூபிஐ பரிவர்த்தனைகள் 58 சதவீத வளர்ச்சியைக் கண்டு, ஜூலை 2023ல் 9.96 பில்லியனை எட்டியுள்ளது.
அதேநேரதிதல் UPI (Unified Payments Interface) QR குறியீடு மோசடி என்பது சமீப காலங்களில் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் QR குறியீடு பயன்பாடு அதிகரித்திருப்பதை குறிவைத்து புதிய வழிகளில் மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்தவகை மோசடியில் நீங்கள் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருப்பது அவசியம்.
மேலும் படிக்க | தீபாவளி ஆஃபர்: 12ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா ... MOTOROLA போனை இப்போதே வாங்கிடுங்க
அந்தவகையில் நிதி மோசடியில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்
- முடிந்தவரை பாதுகாப்பற்ற QR குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பாதுகாப்பானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- பணம் செலுத்துவதற்கு முன், ஸ்கேன் செய்யப்பட்ட QR குறியீட்டுடன் தொடர்புடைய நபர் அல்லது நிறுவனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்க நேரம் ஒதுக்குங்கள்.
- QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு, மெய்நிகர் கட்டண முகவரிகளை கவனமாகப் பார்க்கவும். அவை முதலில் உண்மையானதாகத் தோன்றலாம், ஆனால் pmcare@okicici.com போன்றவை மோசடி செய்பவர்களால் இயக்கப்படுகிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
- எந்தவொரு கட்டணத்தையும் அங்கீகரிக்கும் முன், ஸ்கேன் செய்யப்பட்ட QR குறியீட்டின் அடையாளத்தை எப்போதும் இருமுறை சரிபார்த்து கொள்ளவும்.
- QR குறியீடு பரிவர்த்தனைகளுக்கான பரிவர்த்தனைத் தொகையானது முன் வரையறுக்கப்பட்ட வரம்பை மீறும் போது, குறிப்பாக பரிவர்த்தனை வகை "SCAN & PAY" மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறும் சந்தர்ப்பங்களில், எச்சரிக்கையுடன் செயல்படுவதன் மூலம் ஆபத்தை தவிர்க்கலாம்.
சாய்பிரசாத் ஷங்கர், CTO, Deciml கூறும்போது, UPI கட்டணத்தைப் பெறுவதற்கு நீங்கள் குறியீட்டை ஸ்கேன் செய்யவோ, OTP ஐ உள்ளிடவோ அல்லது உங்கள் பின்னைப் பகிரவோ தேவையில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். UPI மூலம் பணம் அனுப்பும்போது பெறுநரின் பெயரைச் சரிபார்ப்பது எப்போதும் நல்லது என்று அவர் அறிவுறுத்தினார்.
MFilterIt, இணை நிறுவனர் மற்றும் CEO, அமித் ரெலன் பேசும்போது, யுபிஐ பரிவர்த்தனையின்போது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதுடன், சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
1) சந்தேகத்திற்கிடமான இணைப்பு மூலம் பணம் செலுத்த வேண்டாம்
2) தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட அல்லது பணம் செலுத்துதல் தொடர்பான தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம்
3) QR குறியீடுகள் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, பெறுவதற்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்
4) சந்தேகத்திற்கிடமான அல்லது தெரியாத அழைப்பாளர்களுடன் OTP ஐப் பகிர்வதைத் தவிர்க்கவும்
இந்தியா பரிவர்த்தனை செய்யும் முறையில் UPI புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புரட்சிகர நடவடிக்கை மோசடியாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஃபிஷிங் மோசடிகள் வியக்கத்தக்க வளர்ச்சியைக் காண்கின்றன.மேலும் QR குறியீடு மோசடி மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் பல முறைகளில் ஒன்றாகும்.
மேலும் படிக்க | AI கேமராவுடன் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான விலையில் கிடைக்கும் மொபைல்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ