15000 ரூபாய்க்கு குறைவான விலையில் OnePlus ஸ்மார்ட்போன்! “அவசரப்படாதீங்க”
Cheap Oneplus: மலிவான விளியில் Flipkart இணையதளத்தில் OnePlus Nord N20 SE பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் வாங்க வேண்டாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது சந்தையை இந்தியாவில் விரிவுபடுத்தும் வகையில் புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. OnePlus Nord N20 SE ஐ இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படாவில்லை. ஆனால் OnePlus Nord N20 SE எனும் ஸ்மார்ட்போன் Flipkart India இணையதளத்தில் 15000 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது OnePlus Nord N20 SE ஆனது இந்தியாவில் ரூ. 14,990-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அம்சங்கள், குறிப்புகள், விலை மற்றும் விற்பனைத் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எந்த உத்தரவாதமும் கிடையாது:
ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை இவ்வளவு குறைவாக இருப்பதால், இந்த போனை வாங்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் பொதுவாக, OnePlus Nord சீரிஸ் போன்கள் இந்தியாவில் ரூ.20,000 விலையில் இருக்கும். மறுபுறம் OnePlus Nord N20 SE ஐ எப்போது வெளியிட திட்டமிட்டுள்ளது என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தவில்லை. எனவே, இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படாத தொலைபேசியைப் பெறுவது ஆபத்தானது. இந்த மாடலுக்கு உத்தரவாதமோ அல்லது விற்பனைக்குப் பிறகு சேவையோ நிறுவனம் பொறுப்பேற்காது என்பதே அதற்குக் காரணம்.
மேலும் படிக்க: ஸ்மார்டா யோசிச்சா 22 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட் டிவி ரூ.1000-க்கு வாங்கலாம்
ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ விலை:
OnePlus Nord N20 SE ஸ்மார்ட்போன் மாடல்கள் Flipkart மற்றும் Amazon India இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இருந்து OnePlus Nord N20 SE நீக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் Flipkart தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. Flipkart இல், OnePlus Nord N20 SE ஆனது Oasis Blue மற்றும் Celestial Black ஆகிய இரண்டு வண்ணங்களில் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்புடன் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விலையில் ரூ.14,749 என பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவரை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்ட விலை பட்டியலில் இது மலிவான போன் ஆகும்.
ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ அம்சங்கள்:
OnePlus Nord N20 SE ஸ்மார்ட்போன் 6.56-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த போனின் எடை 187 கிராம். OxygenOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W SuperVooc சார்ஜிங் ஆதரவு மற்றும் பல அம்சங்களும் அடங்கும்.
மேலும் படிக்க: Netflix பயனர்களுக்கு ஷாக்: இனி இதை செய்ய முடியாது, புதிய அம்சம் அறிமுகம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ