No-objection Certificate: உங்கள் வாகனத்தை ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு மாற்றினாலோ, அல்லது அதை விற்க விரும்பினாலோ, உங்களுக்கான முக்கியமான செய்தியாக இது இருக்கும். வேறு நகரத்திற்கு வாகனத்தை மாற்றினாலோ அல்லது விற்க நினைத்தாலோ, அதற்கு என்ஓசி மிகவும் அவசியம் என்பது பலருக்கு தெரிவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக வாகனத்தில் எலக்ட்ரிக் கிட் நிறுவுவதில் இருந்து, பல விஷயங்களுக்கு என்ஓசி தேவைப்படும். உங்கள் சொந்த வாகனத்திற்கு நோ-அப்ஷக்‌ஷன் சான்றிதழை (NOC) நீங்கள் கண்டிப்பாக பெற வேண்டும். நீங்கள் இதை ஆர்டிஓ (RTO) அலுவலகம் அல்லது ஆன்லைனிலும் பெறலம். ஆன்லைனில்  NOC பெறுவதற்கான செயல்முறையை இந்த பதிவில் காணலாம். 


NOC ஏன் தேவைப்படுகிறது?


இது தவிர, நீங்கள் வசிக்கும் முகவரியை மாற்றும்போதும், ​​உங்களுக்கு என்ஓசி தேவைப்படுகிறது. நீங்கள் ஏஜென்சிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கிகள் ஏதும் இல்லை என்பதற்கான ஆதாரத்தை NOC வழங்குகிறது. மேலும் நீங்கள் கடன்/கட்டணத்தையும் செலுத்தியுள்ளீர்கள் என்பதையும் இது உறுதிபடுத்துகிறது. 


காரின் நிறத்தை மாற்றவும் உங்களுக்கும் என்ஓசி தேவைப்படும். மேலும், வங்கியில் உங்கள் வாகனத்தின் ஹைபோதெகேஷனை முடிக்கவும் NOC தேவைப்படுகிறது.


என்ஓசி-க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?


- முதலில் https://Parivahan.Gov.In/Parivahan/Hi என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.


- 'Application For No Objection Certificate’-ஐ தேர்ந்தெடுக்கவும்.


- அடுத்த பக்கத்தில், தேவையான விவரங்களை உள்ளிடவும்.


- 'பதிவு எண்/சேஸ் எண் சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.


- பின்னர், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP ஐ உருவாக்கவும். ‘Show Detail’ -ல் கிளிக் செய்யவும்.


- இணையதளம் விண்ணப்பப் படிவத்தை உருவாக்கும். விண்ணப்பப் படிவத்தில் உள்ள தரவை சரிபார்க்கவும்.


- விண்ணப்பத்தில் கார் இன்சூரன்ஸ் விவரங்கள் சேர்க்கப்படவில்லை என்றால், அவற்றைச் சேர்க்கவும்.


- புதிய RTO குறியீட்டை உள்ளிட்டு ‘save' என்பதைக் கிளிக் செய்யவும்.


- செயல்முறையை நிறைவு செய்ய, நீங்கள் ஒரு தொகையை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய ரசீதின் பிரிண்ட் அவுட்டை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.


- கடைசியாக, மீதமுள்ள செயல்முறையை முடிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டண ரசீதுடன் தொடர்புடைய RTO-க்கு செல்லவும்.


ALSO READ | டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டதா; வீட்டில் இருந்த படியே டூப்ளிகேட் DL பெறலாம்..!! 


NOC-க்கு தேவையான ஆவணங்கள்


- வாகன உரிமையாளர் கையொப்ப அடையாளம்


- என்ஜின் எண் மற்றும் சேஸ் எண்ணின் பென்சில் அச்சு


- மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUCC)


- விண்ணப்பம் (படிவம் 28)


- புதுப்பித்த கட்டண சாலை வரி ரசீதுக்கான சரியான ஆவணம்


- வாகன காப்பீட்டுக் கொள்கையின் சான்றளிக்கப்பட்ட நகல்


- வாகன பதிவு (Vehicle Registration) சான்றிதழின் நகல்


ALSO READ | RTO registration: தனி ஆர்டிஓ பதிவு செய்யாமலேயே இந்தியா முழுவதும் பயணிக்கலாம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR