டிரைவிங் லைசென்ஸ் உரிமம் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை!

Driving License Documents: நீங்கள் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பினால், உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும், அதே நேரத்தில் கியர் இல்லாதா வாகனம் ஓட்ட, உங்களுக்கு குறைந்தது 16 வயது இருக்க வேண்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2021, 08:16 PM IST
  • வாகனங்களை ஓட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் தேவை.
  • உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.
  • முதலில் கற்றல் உரிமம் வழங்கப்படுகிறது.
டிரைவிங் லைசென்ஸ் உரிமம் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை! title=

Driving License Documents: இந்தியாவில் மோட்டார் வாகனங்களை ஓட்ட அனைவருக்கும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் தேவை. இந்த டிரைவிங் லைசென்ஸ் உரிமம் என்பது மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆர்டிஓ (Regional Transport Office) அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. இது நாடு முழுவதும் செல்லுபடியாகும். ஒரு நபர் வாகனம் ஓட்ட விரும்பினால், முதலில் கற்றல் நோக்கத்திற்காக அவருக்கு கற்றல் உரிமம் வழங்கப்படுகிறது. இது ஒரு தற்காலிக உரிமம். இது ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதற்குப் பிறகு ஒருவருக்கு நிரந்தர உரிமம் வழங்கப்படுகிறது. நீங்கள் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பினால், உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும், அதே நேரத்தில் கியர் இல்லாதா வாகனம் ஓட்ட, உங்களுக்கு குறைந்தது 16 வயது இருக்க வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் (Driving License) உரிமம் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

ஓட்டுநர் உரிமத்திற்கு இந்த ஆவணங்கள் அவசியம்:

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முகவரி சான்று (கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தின் உங்கள் சுய புகைப்படம் உள்ள அசல் மற்றும் நகல் படவம் கட்டாயம் தேவை)

வாக்காளர் அடையாள அட்டை
ஆயுள் காப்பீடு திட்டம்
கடவுச்சீட்டு
மின்சாரம் / நீர் / தொலைபேசி பில்
ரேஷன் கார்டு
ஆதார் அட்டை
வருமான வரி சான்றிதழ்.
விண்ணப்பதாரரின் மூன்று சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

ALSO READ | Driving License: இனி லைசென்ஸ் பெற RTO செல்ல தேவையில்லை

பிறந்த சான்றை வழங்க (கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் சுய புகைப்பட உள்ள ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகல் படிவம் தேவை)

பிறப்பு சான்றிதழ்
பள்ளி மதிப்பெண் தாள் அல்லது டிசி
கடவுச்சீட்டு
பான் கார்டு
குடியுரிமைக்கான ஆதாரம்

ALSO READ | Driving License: காலாவதியாகிறதா; ஆன்லைனில் எளிதாக அப்ளை செய்யலாம்

ஆர்டிஓ தவிர, யாரெல்லாம் டிரைவிங் லைசென்ஸ் வழங்க முடியும்:
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கான விதிகளை மாற்றியுள்ளது. அரசின் புதிய விதியின் படி, வாகன உற்பத்தியாளர்கள் சங்கம், என்ஜிஓக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயிற்சி மையங்களை நடத்த அனுமதிக்கப்படும். பயிற்சிக்குப் பிறகு, இவை அனைத்தும் ஓட்டுநர் உரிமத்தை வழங்க முடியும். இருப்பினும், இதற்காக, இந்த சட்ட நிறுவனங்கள் மத்திய மோட்டார் வாகனங்கள் (சிஎம்வி) விதிகள், 1989 -ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் தேவையான வசதிகளுடன் நிறுவனம் இருப்பது அவசியம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News